அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு: நினைவிடத்தில் கமலா ஹாரிஸ், ஜோ பைடன் அஞ்சலி

நினைவிடத்தில் அஞ்சலி.

ஜோ பைடன் முதலில் கையெழுத்திடும் அவசரக் கோப்புகளில் ஒன்று கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

  அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பின் ஆட்சியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

  4 லட்சம் பேர் பலி என்பது 2ம் உலகப்போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கைக்கு சமம். புளோரிடா, நியூ ஆர்லியன்ஸ், ஓக்லஹாமா மாகாணங்களின் மக்கள் தொகைக்கு இணையானது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. வரும் மே மாதத்துக்குள் பலி எண்ணிக்கை 5.50 லட்சமாக உயரும் என்று வாஷிங்டன் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

  முதலில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தைத் தொட 4 மாதங்களானது. பிற்பாடு 3 லட்சமாக உயர்ந்த பலி எண்ணிக்கை ஒரே மாதத்தில் 4 லட்சமாக அதிகரித்ததில் அமெரிக்க மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

  இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ஆப்ரஹான் லிங்கன் நினைவிடத்தில் கொரோனா பலியானவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நினைவிடத்தில் அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அஞ்சலி செலுத்தினர்.

  அப்போது ஜோ பைடன் பேசியதாவது: நமக்கு காயங்களை ஏற்படுத்திய இழப்புகளை நினைவு கூர்தல் வேதனையடையச் செய்தாலும் வேறு வழியில்லை, என்றார்.

  ஜோ பைடன் முதலில் கையெழுத்திடும் அவசரக் கோப்புகளில் ஒன்று கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: