நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: நான்கு மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: நான்கு மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை

ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நான்கு மாகாணங்களில் ஜோ பைடன் முன்னணியில் இருப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    நம்மூர் தேர்தல்களில் இரண்டு கட்சியினர் சற்றேறக்குறைய சம பலத்துடன் இருக்கும் நிலையில் நடுநிலை வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களே வெற்றி பெறுவர் என்பது நாம் அறிந்த ஒன்று. இதே போல அமெரிக்க தேர்தல்களில் இரண்டு வேட்பாளர்களும் சமபலத்துடன் உள்ள மாகாணங்கள் ஊசலாடும் மாகாணங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் அதிக மாகாணங்களில் வெற்றி பெறுபவருக்கு அதிபராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

    அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ஊசலாடும் மாகாணங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நான்கு மாகாணங்களில் ஜோ பைடன் முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியானா கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் விஸ்கான்சின், பென்சில்வேனியா, ஃப்ளோரிடா மற்றும் அரிஸோனா மாகாணங்களில் டிரம்பைக் காட்டிலும் பைடன் முன்னணியில் இருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்காத பலர் இந்த தேர்தலில் வாக்களித்திருப்பது பைடனுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

    விஸ்கான்சின் மாகாணத்தில் 41% வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள டிரம்பைக் காட்டிலும் 11 புள்ளிகள் அதிகம் பெற்று பைடன் முன்னணியில் இருக்கிறார்.ஃப்ளோரிடாவில் 47 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள பைடன், டிரம்பை விட மூன்று புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கிறார்.

    மேலும் படிக்க... இலையா? சூரியனா? யாருடன் கூட்டணி.. தடுமாற்றத்தில் தனியரசு..



    அரிஸோனா மற்றும் பென்சில்வேனியாவில் டிரம்பை விட பைடனுக்கு ஆறு புள்ளிகள் அதிகம் கிடைத்துள்ளன. இவற்றில் எந்த மாகாணத்திலும் டிரம்புக்கு 44 சதவீதத்திற்கு மேல் ஆதரவு இல்லை என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    ஆனாலும் வழக்கம் போல, ஒட்டுமொத்தமாக தனக்கு கணிசமான சதவீதம் கிடைத்திருப்பதாகவும், பல மாகாணங்களில் ஜோ பைடன் வெளியேறி விட்டதாகவும் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published: