Home /News /international /

அமெரிக்காவின் 46-வது அதிபராகும் வாய்ப்பை நெருங்கும் ஜோ பைடன்...!

அமெரிக்காவின் 46-வது அதிபராகும் வாய்ப்பை நெருங்கும் ஜோ பைடன்...!

ஜோ பைடன்

ஜோ பைடன்

16 வாக்குகளைக் கொண்ட ஜார்ஜியாவில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வந்த நிலையில், திடீரென பைடன் கை ஓங்கியது. அங்கு டிரம்பை விட பைடன் கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

  • News18
  • Last Updated :
    ஜார்ஜியா, நெவாடா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் கூடுதல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இதன்மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராகும் வாய்ப்பை பைடன் நெருங்கியுள்ளார்.

    அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் குழு வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

    தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 214 தேர்தல் குழு வாக்குகளுடன் பின் தங்கியுள்ளார். பைடன் அதிபராக இன்னும் 6 தேர்தல் குழு வாக்குகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, நெவாடா ஆகிய மாகாணங்களின் தேர்தல் முடிவை பொருத்தே அடுத்த அதிபரை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Also read... விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை எனக்கு உள்ளது - எஸ்.ஏ.சந்திரசேகர்!



    16 வாக்குகளைக் கொண்ட ஜார்ஜியாவில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வந்த நிலையில், திடீரென பைடன் கை ஓங்கியது. அங்கு டிரம்பை விட பைடன் கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இதேபோன்று நெவாடா மாகாணத்திலும் பைடன் முன்னிலை வகிக்கிறார். பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் முன்னிலை வகித்துவருகிறார்.

    வடக்கு கரோலினாவில் டிரம்ப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதன்மூலம், ஜோ பைடனின் வெற்றி உறுதியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டி வரும் நிலையில் தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என பைடன் வலியுறுத்தியுள்ளார்.

    இதனிடையே, டிரம்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மறுவாக்குக்கு நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அந்த மாநில நிர்வாகம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Donald Trump, Joe biden, US Election 2020

    அடுத்த செய்தி