அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் வேட்பாளராகத் தேர்வானார் ஜோ பிடன்

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் வேட்பாளராகத் தேர்வானார் ஜோ பிடன்
ஜோ பிடன் (Reuters)
  • Share this:
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயக் கட்சியில் போட்டியிடுவதற்காக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் பெர்னி சான்டர்ஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது.

இதற்கிடையே, அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பெர்னி சான்டர்ஸ் விலகினார். இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜோ பிடன் அதிக வாக்குகள் பெற்றார்.


இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 1991 பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலை ஜனநாயக கட்சியினர் ஒன்றிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக ஜோ பிடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Also read... பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்..







Also see...
First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading