ஹோம் /நியூஸ் /உலகம் /

US election Results 2020 | அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை..

US election Results 2020 | அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை..

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு

கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய நேரப்படி, நாளை அதிகாலை வரை ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதுவரை ஜோ பைடன் 225 தேர்வுக்குழு வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

உலகமே பரபரப்பாக எதிர்பார்க்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மொத்தமுள்ள 50 மாகாணங்களில் இதுவரை 23 மாகாணங்களை டிரம்பும், 19 மாகாணங்களை ஜோ பைடனும் கைப்பற்றியுள்ளனர். ஆறு மாகாணங்களில் டிரம்பும், இரண்டு மாகாணங்களில் பைடனும் முன்னிலையில் இருக்கின்றனர்.

பைடனை விட அதிக எண்ணிக்கையிலான மாகாணங்களை வென்ற போதும், அதிக தேர்வுக்குழு வாக்குகள் கொண்ட கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க் மாகாணங்களை கைப்பற்றியதன் மூலம் பைடனுக்கு பலம் கூடியுள்ளது. கலிஃபோர்னியாவின் 55 தேர்வுக்குழு வாக்குகள் மற்றும் நியூயார்க்கின் 29 வாக்குகள் பைடனுக்கு கிடைத்துள்ளன.

ஃப்ளோரிடா, அலபாமா, லூசியானா, டென்னஸி, ஒஹையோ உள்ளிட்ட மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார். கலிஃபோர்னியா, நியூயார்க், இல்லினாய்ஸ், நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களை பைடன் கைப்பற்றியுள்ளார்.

டிரம்ப் முன்னிலையில் இருக்கும் பென்சில்வேனியாவில் அவர் வெல்லும் பட்சத்தில் கூடுதலாக அவருக்கு 20 வாக்குகள் வரை கிடைக்கும். இதனால் முடிவு வெளிவராத இத்தகைய மாகாணங்களைப் பொறுத்து முன்னிலை நிலவரம் மாறக்கூடும்.

Us election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தல் விறுவிறுப்பு.. வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்..

ஏற்கனவே,  தபால் வாயிலாக 10 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், மேலும், ஆறு கோடி பேர், நேரில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை.. ட்ரம்புக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு..

இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில், அதிக ஓட்டுகள் பதிவு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2016-இல் நடந்த தேர்தலில், 13.89 கோடி பேர் வாக்களித்தனர். இதில், 4.70 கோடி பேர் மட்டுமே, தபால் ஓட்டுகளை அளித்தனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தபால் ஓட்டுகள் மூலமாக வாக்களிக்க, அனைத்து மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Donald Trump, Joe biden, US Election 2020