• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • அமெரிக்காவை உலுக்கிய நாடாளுமன்ற வன்முறைக்கு டிரம்ப்தான் காரணம்: ஜோ பைடன் பரபரப்புக் குற்றச்சாட்டு

அமெரிக்காவை உலுக்கிய நாடாளுமன்ற வன்முறைக்கு டிரம்ப்தான் காரணம்: ஜோ பைடன் பரபரப்புக் குற்றச்சாட்டு

ஜோ பைடன் - ட்ரம்ப்

ஜோ பைடன் - ட்ரம்ப்

அவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல, அவர்களைப் போராட்டக்காரர்கள் என்று அழைக்க வேண்டாம். இவர்கள் கலவரக் கும்பல், கலகக்காரர்கள், உள்நாட்டு பயங்கரவாதிகள், இது இவ்வளவு கீழ்த்தரமானது.

 • Share this:
  ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

  இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் தடுக்கும் வகையில், டிரம்பின் 3 டுவிட்டர் பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கியது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டது.

  பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனமும் டிரம்பின் கணக்கை 24 மணிநேரம் முடக்கம் செய்து நேற்று அறிவித்தது.

  இது தொடர்பாக அதிபர் பொறுப்பேற்கும் ஜோ பைடன் கூறும்போது, “இந்தச் சம்பவம் மறுப்பும் அல்ல எதிர்ப்பும் அல்ல, இது போராட்டமும் அல்ல, வெறும் குழப்பம், பெரும் குழப்பம் மட்டுமே” என்றார்.

  அவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல, அவர்களைப் போராட்டக்காரர்கள் என்று அழைக்க வேண்டாம். இவர்கள் கலவரக் கும்பல், கலகக்காரர்கள், உள்நாட்டு பயங்கரவாதிகள், இது இவ்வளவு கீழ்த்தரமானது, என்று பைடன் ட்ரம்ப்பைச் சாடினார்

  கடந்த 4 ஆண்டுகளாக நம் ஜனநாயக மரபை கேலிக்குள்ளாக்கும் இழிவுபடுத்தும் அதிபர் ஆண்டு வந்தார். நம் சட்டம், நம் பண்பாடு எதையும் அவர் கடைப்பிடிக்க மறுத்தார். ஜனநாயகத்தின் நிறுவனங்கள் மீது அவர் நேரடித் தாக்குதல் நடத்தினார், வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார்.

  கும்பல் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு குரல்களை நசுக்கப் பார்க்கிறார் டிரம்ப்” என்றா பைடன்.

  துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸ், “இரண்டு விதமான நீதியைப் பார்த்தோம், கருப்பர்களுக்கு எதிராக தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு, யுஎஸ் கேப்பிடாலுக்குள் நுழைந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுதான் ட்ரம்ப் நியாயம்” என்றார்.

  ஜோ பைடன் மேலும் கூறும்போது, “இதே கேப்பிடாலை நேற்று கருப்பர்கள் தாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்பதும் எனக்குத் தெரியும்.

  எனவே அமெரிக்காவில் ஜனநாயகத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் மீட்கக் கடமைப்பட்டுள்ளோம். அமெரிக்க சட்டத்தின் கீழ் அனைவரும் சமமே. இதைச் செய்வதற்கு நீதித்துறை தவிர நமக்கு சிறந்த இடம் வேறில்லை” என்றார் பைடன்.

  அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: