ஜோ பைடனுக்கு 79-வது பிறந்த நாள் - அதிபர் டிரம்ப் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடிவரும் அவருக்கு வயது 78. அமெரிக்க வரலாற்றில், ரொனால்ட் ரீகனுக்கு பிறகு மிக அதிக வயதில் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார் ஜோ பைடன்.

ஜோ பைடனுக்கு 79-வது பிறந்த நாள் - அதிபர் டிரம்ப் வாழ்த்து!
ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்
  • News18
  • Last Updated: November 21, 2020, 10:15 AM IST
  • Share this:
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தனது 79-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெனிசில்வேனியாவின் ஸ்கார்டனில் 1942-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோ பைடன. தனது 29-வது வயதில் செனட் சபைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை அமெரிக்க அரசியலில் அசைக்க முடியாது தடம் பதித்தவர்.

இன்று பிறந்த நாள் கொண்டாடிவரும் அவருக்கு வயது 78. அமெரிக்க வரலாற்றில், ரொனால்ட் ரீகனுக்கு பிறகு மிக அதிக வயதில் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜோ பைடனை கடுமையாக விமர்சித்து வந்த அதிபர் டிரம்ப், பைடனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம் 15-ஆம் தேதி, துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசின் பிறந்த தினத்தின் போது, அடுத்த ஆண்டு பிறந்த நாளை இருவரும் வெள்ளை மாளிகையில் கொண்டாடுவோம் என வாழ்த்தியிருந்தார் பைடன். அந்த வாழ்த்துச் செய்தி தற்போது உண்மையாகியுள்ளது.

Also read... கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்ற ஐபிஎஸ் மோகிதா சர்மா - அசத்தல் ட்வீட்!ஜோ பைடனுக்கு ஐஸ் கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம் என்றும், இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஐஸ் கிரீம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்க அதிபராக சரியாக இரண்டு மாதங்களில் அதாவது ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்றுக் கொள்வார். எனவே, இந்த ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் ஜோ பைடனின் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நன்றி தெரிவிக்கும் திருவிழாவும் பைடனுக்கு சிறப்பானதாக அமையும் என அமெரிக்க மக்கள் கூறுகின்றனர்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading