• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Corona Vaccine : இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன் அறிவிப்பு

Corona Vaccine : இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன் அறிவிப்பு

ஜோ பைடன் - மோடி

ஜோ பைடன் - மோடி

உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு எட்டு கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

  • Share this:
    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு எட்டு கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக தற்போது ஐந்தரை கோடி டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பைடன் அறிவித்துள்ளார்.

    அந்தவகையில் ஒரு கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகள், ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், ஒரு கோடி 40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தென் அமெரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இவைதவிர ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கப்படவிருப்பதாகவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும், தடுப்பூசி பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முக்கிய பாதுகாப்பு ஆயுதமாக தடுப்பூசி மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 85 லட்சத்து 96 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 78 லட்சம் பேர் முதல் டோஸும், 7 லட்சம் பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

    இதுதொடர்பாக டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, Well done India என்று குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், தடுப்பூசி பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்களப்பணியாளர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Must Read : வாகனங்களுக்கான ஆவணங்கள் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!

    இதற்கிடையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர் காலனி அகதிகள் முகாமில் 218 குடும்பங்களைச் சேர்ந்த 734 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்டோர் என 450 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் முதல் கட்டமாக 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடை பெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில். சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 18 வயதிற்கு மேற்பட்ட 250 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரசன்னா சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். . மீதமுள்ள 200 பேருக்கு அடுத்த வாரம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: