Home /News /international /

நெருப்புடன் விளையாட வேண்டாம்.. 2 மணி நேர தொலைபேசி உரையாடலில் பைடனை எச்சரித்த சீன அதிபர்

நெருப்புடன் விளையாட வேண்டாம்.. 2 மணி நேர தொலைபேசி உரையாடலில் பைடனை எச்சரித்த சீன அதிபர்

ஜி ஜிங்பிங் மற்றும் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

ஜி ஜிங்பிங் மற்றும் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என சீனா அதிபர் ஜி ஜிங்பிங் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீனா அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரும் நேற்று தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். உலகின் இரு பெரும் முக்கிய சக்திகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனா நாட்டின் தலைவர்கள் நேற்று சுமார் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் தொலைப்பேசி வாயிலாக இந்த உரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை சீனா அதிபர் ஜியுடன் இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. நான்கு முறை தொலைபேசி மூலம் மட்டுமே பேசி உரையாடியுள்ள நிலையில், நேற்று ஐந்தாவது முறையாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.

    விரைவில் இரு நாட்டு தலைவர்களும் நேரடி சந்திப்பை மேற்கொள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்துள்ளனர்.இந்த பேச்சு வார்த்தையின் போது தைவான் பிராந்தியத்தின் கொள்கை குறித்து இரு நாட்டு தலைவர்களும் முக்கியமாக விவாதித்துள்ளனர்.தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவும் நோக்கி ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது.

    அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது சீனாவை கடும் எரிச்சல் அடைய செய்கிறது. எனவே, அதிபர் பைடனுடனான பேச்சின் போது, தைவான் விவகாரம் குறித்து ஜி ஜிங்பிங் சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது.

    இதையும் படிங்க: போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவி செயலால் கொத்தி எழுந்த மக்கள்

    தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதே போன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Joe biden, Taiwan, USA vs CHINA, Xi jinping

    அடுத்த செய்தி