• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இது தொடக்கமே தவிர முடிவல்ல - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி உரை

இது தொடக்கமே தவிர முடிவல்ல - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி உரை

கமலா-ஜோ பிடன்

கமலா-ஜோ பிடன்

தொண்டர்கள் மத்தியில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி உரையாற்றினர்

  • Share this:
    தொண்டர்கள் மத்தியில் வெற்றி உரை ஆற்றிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன், ஜனநாயக கட்சிக்கு நாட்டு மக்கள் சிறப்பான வெற்றியை அளித்துள்ளதாக கூறினார். ஒட்டு மொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்றும், அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது எனவும் குறிப்பிட்டார்.

    கடந்த நான்கு ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக போராடி வந்ததாகவும், உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம் எனவும் அவர் கூறினார். எவ்வித பேதமும் இன்றி அனைவருக்குமான அதிபராக தாம் இருப்பேன் என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். டொனால்டு டிரம்புக்கு வாக்களித்தவர்களின் ஏமாற்றம் தமக்கு புரிவதாகவும், வாய்ப்புகளை பரிமாறிக் கொண்டு இணைந்து பணியாற்றும் நேரம் இது எனவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இதேபோல், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட முதல் ஆப்ரிக்க-அமெரிக்க பெண் துணை அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

    அமெரிக்க துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரீஸ் தொண்டர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தலைசிறந்த நபரையே அதிபராக தேர்வு செய்துள்ளோம் என குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தாம் தேர்வாகி உள்ளதாகவும், இது தொடக்கமே தவிர முடிவல்ல என்றும் கூறினார்.

    மேலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி நம்மிடம் இருப்பதாகவும் கமலா ஹாரீஸ் தெரிவித்தார். தமது தாய் ஷியாமளா கோபாலனுக்கு இந்த நேரத்தில் நன்றியுள்ளவராக இருப்பதாகவும், இந்தியாவில் இருந்து 19 வயதில் அமெரிக்காவுக்கு வந்த அவர் இந்த தருணத்தை நினைத்து பார்த்திருக்க மாட்டார் எனவும் கமலா ஹாரிஸ் கூறினார்.

    இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் வெற்றி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனின் ஆதரவாளர்கள், நியூயார்க்கின் Times Square முன் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் வெள்ளை மாளிகை அருகே உள்ள வீதிகளில் திரண்ட ஜோ பைடனின் ஆதரவாளர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

    அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து, அவரது பூர்வீக ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்a

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: