• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகமும் ஆதரவு

வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகமும் ஆதரவு

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது, ஜனநாயகத்தின் தனிச் சிறப்பாகும். இதைத் தான், இந்திய உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.எந்த பிரச்னைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அமெரிக்க அதிபர் நிர்வாகம் கூறியுள்ளது. 

  • Share this:
    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது .

    இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சந்தையை உருவாக்குவதுடன் தனியார் முதலீட்டையும் ஈர்க்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த பிரச்னையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்க பாப் பாடகி ரிஹானா உள்ளிட்டோர், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    ரிஹானாவின் கருத்துக்கு அவரை ‘முட்டாள்’ என்று வர்ணித்து கங்கனா ரணாவத் பதிவிட்டிருந்தார். பிராக்யன் ஓஜா ரிஹானாவுக்கு பதில் அளித்து இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்றார்.

    இந்தப் பிரச்சினை பூதாகரமாக மத்திய அரசு கருத்து கூறும் பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    டெல்லியில் விவசாயிகள் போராட்டங்களை நிறுத்த அரசு பேச்சு வார்த்தைகள் நடத்தி எந்தப் பலனும் ஏற்படவில்லை.

    உலக அளவில் விவசாயப்போராட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் மத்திய அரசு அரைகுறை தகவல்கள் மற்றும் பொய் தகவல்கள் அடிப்படையில் கருத்துக் கூறுவதை, பிரபலங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டிப்புடன் கூறியிருந்தது.

    கிரிக்கெட் வீரர்களும் மத்திய வெளியுறவு அமைச்சகம் உருவாக்கிய  ‘இந்தியா டுகெதர்’  ‘இந்தியா எகெய்ன்ஸ்ட் புரோபகாண்டா’ ஆகிய 2 ஹேஷ்டேகுகளை பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தனர்.
    இந்நிலையில், இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்த பிரச்னை குறித்து, நிருபர்களின் கேள்விக்கு, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை, அமெரிக்கா வரவேற்கிறது. விவசாய துறை சந்தையின் செயல்திறனை அதிகரிக்கும், அதிக அளவு தனியார் முதலீடுகளை ஈர்க்கும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது. அதுபோன்றே, இந்த சட்டங்கள் அமைந்துள்ளன, என்றார்.

    மேலும், அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது, ஜனநாயகத்தின் தனிச் சிறப்பாகும். இதைத் தான், இந்திய உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.எந்த பிரச்னைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அமெரிக்க அதிபர் நிர்வாகம் கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: