Home /News /international /

அதிபராக பொறுப்பேற்று முதல் முறை ஆசியா வரும் ஜோ பைடன்

அதிபராக பொறுப்பேற்று முதல் முறை ஆசியா வரும் ஜோ பைடன்

ஜப்பான் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஜப்பான் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்த ஜோ பைடனுக்கு அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா விமான நிலையத்தில் வரவேற்பு தந்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆசிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர், வடகொரியாவின் அணு ஆயுத சோதனை போன்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஜோ பைடன் தற்போது ஜப்பான் வந்துள்ளார்.

    ஜோ பைடனின் ஜப்பான் வருகை இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்த ஜோ பைடனுக்கு அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா விமான நிலையத்தில் வரவேற்பு தந்துள்ளார்.

    ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தொடர் சவால் அளிக்கும் நாடுகளாக இருந்து வருகின்றன. தற்போதைய சூழலில் மூன்று நாடுகளிலும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவித்து. அந்த போரானது கடந்த இரு மாதங்களாக நீட்டித்து வருகிறது. ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்க அரசு உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிவருகிறது.

    அதேபோல், சீனாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோவிட் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் கடும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

    அதேபோல், வடகொரியா கடந்த 10 நாள்களுக்கு மேலாக காட்டுத் தீயாய் பரவி வரும் கோவிட் பெருந்தொற்றால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வட கொரியா அதிபர் கிம் ஜான் யுன் அங்கு அணு ஆயுத சோதனை நடத்த தீவிரம் காட்டி வருவதாகவும், அதை திசை திருப்பவே அங்கு கோவிட் பரபரப்பு கிளப்பப்பட்டதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மூன்று நாடுகளின் நகர்வுகளையும் அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    இதையும் படிங்க: பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே திரையில் வர வேண்டும் - தாலிபான் உத்தரவு

    ஜோ பைடன் ஜப்பான் வந்துள்ள நிலையில், இந்த பயணத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் குவாட் கூட்டமைப்பு உச்சி மாநாடு மே 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் செல்கிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் அந்நாட்டின் புதிய பிரதமராக ஆந்தோனி அல்பனிஸே தேர்வாகியுள்ளார். இவர் மற்ற குவாட் தலைவர்களை முதல்முறையாக இந்த உச்ச மாநாட்டில் சந்தித்து பேசவுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Joe biden, USA

    அடுத்த செய்தி