உடல் துர்நாற்றத்தால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட தம்பதி..!

சக பயணிகள் மற்றும் சில ஊழியர்கள் புகாரளித்த நிலையில் யூத தம்பதி கீழே இறக்கி விடப்பட்டதாகவும், இதில் இன விரோதம் எதுவும் இல்லை என்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்தது.

news18
Updated: January 27, 2019, 6:40 AM IST
உடல் துர்நாற்றத்தால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட தம்பதி..!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (கோப்புப்படம்)
news18
Updated: January 27, 2019, 6:40 AM IST
விமான ஊழியர்களும், பணியாளர்களும் புகாரளித்த காரணத்தால் அமெரிக்க விமானத்தில் இருந்து யூத தம்பதி இறக்கிவிடப்பட்ட சம்பவம் இனவாத நடவடிக்கை என்று புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள யோச்சி அட்லர், அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் விடுமுறைக்காக டெட்ராய்டு நகருக்குச் செல்வதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த வாரம் ஏறியுள்ளனர்.

அப்போது, அவர்கள் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர்களை கீழே இறங்க ஊழியர்கள் வற்புறுத்தவே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அவர்களை கீழே இறக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை இனவாத ரீதியிலானது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சக பயணிகள் மற்றும் சில ஊழியர்கள் புகாரளித்த நிலையில் யூத தம்பதி கீழே இறக்கி விடப்பட்டதாகவும், இதில் இன விரோதம் எதுவும் இல்லை என்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்தது.

கீழே இறக்கிவிடப்பட்ட அட்லரும் இதனை வழிமொழிந்து, “இனவாத செயல் அங்கு எதுவும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Also See..

First published: January 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்