• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Jeff Bezos:10 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்!

Jeff Bezos:10 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்!

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ்

விண்வெளி சுற்றுலா தொடர்பாக தனியார் நிறுவனங்களிடையே நிலவும் போட்டியில் இது மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.  தனியார் நிதி பங்களிப்பு  மற்றும் தனியாரால் வடிவமைக்கப்பட்ட  விண்கலத்தை விண்வெளி  வீரர்களுடன்  ஒரு வணிக நிறுவனம் ஏவுவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்

  • Share this:
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோர்  நியூ செப்பர்ட் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற நிலையில், 10 நிமிடங்களில் பூமிக்கு திரும்பினர்.

உலக பணக்காரர்களுள் ஒருவராக அறியப்படுவர் ஜெஃப் பெசோஸ். அமேசான் என்னும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவரும் இவரே ஆவர்.   தற்போது வணிகம் என்பதை தாண்டி,  விண்வெளி ஆராய்ச்சி, ஓடிடி தளம் என அமேசான் விரிவடைந்துள்ளது. இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியில் இருந்து ஜெஃப் அண்மையில் விலகினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விண்வெளி ஆராய்ச்சியில்  ஆர்வம் கொண்ட ஜெஃப்  பெசோஸ் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டுகொண்டிருந்தார்.  மேலும் குறைந்த கட்டணத்தில் விண்வெளிக்கு சுற்றுலா செல்வதை சாத்தியமாக்க  ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: வியக்கத்தக்க வகையில் மாறிய கார்பன் சுழற்சி, குளிர்வடைந்த பூமி !



தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ செப்பர்ட்(New Sheperd) விண்கலம் மூலம் ஜெஃப் பெசோஸ் இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.  அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற  பெண் விமானி  வாலி பங்க், 18 வயது ஆலிவர் டையமென் ஆகியோரும் பயணம் மேற்கொண்டனர்.  சுமார் 10 நிமிட பயணத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.  பூமிக்கு திரும்பிய குழுவினருக்கு உறவினரும் நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் படிக்க: பெட்ரோல்-டீசல் விலை குறையப் போகிறது: உற்பத்தியை அதிகரிக்க 'எண்ணெய்’ நாடுகள் சம்மதம்!


விண்வெளி சுற்றுலா தொடர்பாக தனியார் நிறுவனங்களிடையே நிலவும் போட்டியில் இது மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.  தனியார் நிதி பங்களிப்பு  மற்றும் தனியாரால் வடிவமைக்கப்பட்ட  விண்கலத்தை விண்வெளி  வீரர்களுடன்  ஒரு வணிக நிறுவனம் ஏவுவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.



இந்த ஆண்டில் மேலும் இரண்டு விண்கலத்தை விண்வெளிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  அடுத்த விண்கலம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்  விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: