பொறாமையால் பச்சிளம் இரட்டைக் குழந்தைகளை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்

தனக்கு கிடைத்து வந்த அரவணைப்பு நின்றதால் பச்சிளம் இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பு நாய் கடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது

பொறாமையால் பச்சிளம் இரட்டைக் குழந்தைகளை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்
உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள் ( Image: FocusOn News )
  • News18
  • Last Updated: July 9, 2020, 9:00 PM IST
  • Share this:
பிரேசில் நாட்டின் பிரிபா பகுதியில் கடந்த ஜுன் மாதம் 23-ம் தேதி இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. 29 வயதான எலைன் நோவைஸ், ஆன் & ஆனல் என்று பெயரிடப்பட்ட தனது ஒரு மாத பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் குழந்தைகள் கதறி அழுவதைக் கேட்ட எலைன், பதறியபடி வீட்டுக்குச் சென்று பார்க்க அவர்களின் வளர்ப்பு நாய், இரு குழந்தைகளின் வயிற்றுப்பகுதியில் பலமாக கடித்துள்ளதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

Credit: FocusOn Newsநாயை விரட்டிவிட்டு இரு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அவர் தூக்கிச் செல்ல, ஒரு குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் இறந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது குழந்தைகள் இறந்ததை எலைனால் தற்போது வரை நம்ம முடியவில்லை என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். அந்த நாய் இதுவரை அமைதியாகவே இருந்துள்ளது. எப்போதும் எலைனிடம் பாசத்தை வெளிப்படுத்தும் என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.


படிக்க: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

படிக்க: மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ
தனக்கு கிடைத்து வந்த பாசம் தடைபட்டதால், அதற்கு காரணமாக குழந்தைகளை நாய் தாக்கியிருக்கலாம் என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஒரு குழந்தை பெற்றோரிடம் அதிக பாசத்தை பெறும் போது, மற்றொரு குழந்தை அதனால் பொறாமை அடைவது உளவியல் ரீதியாக வழக்கமானது என்றாலும், நாய் போன்ற விலங்குகள் அது போல பொறாமை அடையுமா என்பது தெரியவில்லை.

 
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading