உயிரிழந்தது பிரபல ஜென் பூனை: வீடியோக்களைப் பகிர்ந்து நெட்டிசன்கள் அஞ்சலி..!

பூனையின் உரிமையாளர் அதன் தலையில் காய்கறி, பழங்கள் என எதை கொண்டு வைத்தாலும், அப்படியே ஜென் துறவி தியானத்தில் இருப்பது போல போஸ் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தது பிரபல ஜென் பூனை: வீடியோக்களைப் பகிர்ந்து நெட்டிசன்கள் அஞ்சலி..!
ஜப்பானைச் சேர்ந்த பூனை உயிரிழப்பு
  • Share this:
ஜென் துறவி போன்ற தனது முகபாவங்களால், இணைய உலகின் கவனத்தை ஈர்த்த ஜப்பானைச் சேர்ந்த பூனை தனது 17வது வயதில் உயிரிழந்தது.

ஜப்பானைச் சேர்ந்த ஒரு பூனையின் பெயர் ஷிரோனெகோ. இந்த பூனை தனது அசால்டான நடவடிக்கைகள் மற்றும் விநோதமான செயல்பாடுகள் காரணமாக ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது. ஷிரோனெகோ (Shironeko) எனப்படும் அந்த பூனை, BASKET CAT என்றும், ZEN CAT என்றும் அழைக்கப்பட்டது.

ஜப்பான் விவசாயி ஒருவரின் வீட்டில் பிறந்த இந்த பூனையின் புகைப்படம், முதல்முதலாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து மெல்ல இணையவாசிகளின் கவனத்தை ஜென் பூனை தன்பால் ஈர்க்கத் தொடங்கியது.


சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் இந்த பூனை உருவாக்கியது. ஷிரோனெகோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலின் Subscribers எண்ணிக்கை 2 லட்சத்து 33,000த்தை தாண்டியது.  இதுபோன்ற ஒரு ரிலாக்ஸான பூனையை காண்பது அரிது என்கிறார்கள்.

பூனையின் உரிமையாளர் அதன் தலையில் காய்கறி, பழங்கள் என எதை கொண்டு வைத்தாலும், அப்படியே ஜென் துறவி தியானத்தில் இருப்பது போல போஸ் கொடுக்கும். 2011-ஆம் ஆண்டு BuzzFeed என்ற ஊடக நிறுவனம் அறிவித்த மிக முக்கியமான 30 பூனைகள் பட்டியலில் ஷிரோனெகோ இடம்பிடித்தது. உலகின் மிக ரிலாக்ஸான பூனை என அந்த ஊடகம் அதனை புகழ்ந்தது. இந்த புகழ் ஜென் பூனையை விளம்பர மாடலாகவும் உயர்த்தியது. பொம்மைகள் உட்பட ஜென் பூனை மாடலாக விளங்கிய பல பொருட்கள், அமேசானில் இப்போதும் கிடைக்கிறது.

இத்தனை புகழோடு விளங்கிய பூனை, கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தது. ஷிரோனெகோ (Shironeko) உயிரிழந்த செய்தி, அதனுடைய வலைப்பக்கத்தில் மார்ச் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 8-ஆம் தேதி ஷிரோனெகோ (Shironeko) வின் 18-வது பிறந்த நாளுக்கான வாழ்த்து செய்திகளோடு காத்திருந்த அதன் ரசிகர்கள் தலையில் இந்த செய்தி இடியாக விழுந்தது. ஷிரோனெகோ (Shironeko) மறைவால் சீன, ஜப்பானிய சமூக வலைதளங்கள் இரங்கல் செய்திகளால் சோகத்தில் மூழ்கியுள்ளன.

Also see...

First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading