ஜப்பானில் கனமழையால் 50 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பானில் கனமழையால் 50 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
  • Share this:
ஜப்பானின் தெற்கு பிராந்தியமான கியூஷுவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கியூஷி பகுதியில் வசிக்கும் 30 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குமா ஆற்றங்கரையோர நகரங்களில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு வீடுகளில் நீர் சூழ்ந்தது. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.


 

மேலும் படிக்க...உலகளவில் கொரோனா பாதிப்பு 1.17 கோடியாக அதிகரிப்பு

இந்த நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக கூறினார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading