ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனாவை ஒழிக்க நூதன ஐடியா.. ரூ.20 லட்சம் பில் வந்ததுதான் மிச்சம்..

கொரோனாவை ஒழிக்க நூதன ஐடியா.. ரூ.20 லட்சம் பில் வந்ததுதான் மிச்சம்..

4 மாதங்களாக நீச்சல் குளத்திற்கு இடைவிடாமல் தண்ணீர் சென்றுள்ளது.

4 மாதங்களாக நீச்சல் குளத்திற்கு இடைவிடாமல் தண்ணீர் சென்றுள்ளது.

சுமார் 4 ஆயிரம் டன் அளவுக்கு தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி 11 பெரிய நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா ஒழியும் என நம்பி நீச்சல் குளத்தில் ஆசிரியர் ஒருவர் மாதக்கணக்கில் தண்ணீர் செலுத்தியுள்ளார். இதற்காக பள்ளி ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் அளவுக்கு தண்ணீர் பில் வந்துள்ளது.

ஜப்பானின் டோக்யோ நகரில் செயல்படும் பள்ளி ஒன்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்டது.

இதையொட்டி ஜப்பானில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாக நீச்சல் குளங்கள் திறக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் மூலம் கொரோனா எளிதாக பரவும் என்பதால், இந்த தடையை அரசு ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனியர் பள்ளி ஒன்றின் ஆசிரியர் ஒருவர், நீச்சல் குளத்தில் கொரோனா ஒழியும் என நம்பி, கூடுதல் தண்ணீரை அதில் செலுத்தியுள்ளார்.

இதையும் படிங்க - சிறுமியை தாக்கி கடத்திச் செல்ல முயன்ற குரங்கு… அதிர்ச்சி வீடியோ

கடந்த ஆண்டு ஜூன் மாதம் செலுத்த ஆரம்பிக்கப்பட்ட தண்ணீர், செப்டம்பர் மாதம் வரையிலும் ஒரே நீச்சல் குளத்தில் தொடர்ந்து செலுத்தப்பட்டது. பின்னர் ஒருவழியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.

புதிய தண்ணீரை செலுத்துவதால் கொரோனா முற்றிலும் ஒழிந்து விடும் என்று அவர் நம்பியுள்ளார்.

அந்த வகையில் சுமார் 4 ஆயிரம் டன் அளவுக்கு தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி 11 பெரிய நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க - 2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த சிறுவன்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘பொதுவாக குளோரின் பவுடர் மற்றும் சுத்திகரிப்பு இயந்திரங்கள்தான் தண்ணீரை சுத்தம் செய்யும் தன்மை கொண்டவை. ஆனால் ஆசிரியர் புதிய தண்ணீரை செலுத்தினால் கொரோனா ஒழிந்து விடும் என்று நம்பியுள்ளார்.

அவருக்கு மனநிலை ஏதும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. தண்ணீர் வீணடிக்கப்பட்டதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், ஆசிரியர், மேற்பார்வையாளர்களுக்கு 3.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம்) தண்ணீருக்கான கட்டணம் விதித்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

Published by:Musthak
First published:

Tags: Japan