CoronaVirus : 300 சுவாசக் கருவிகளை அனுப்பும் ஜப்பான் - விரைவில் இந்தியா வருகிறது!

CoronaVirus  : 300 சுவாசக் கருவிகளை அனுப்பும் ஜப்பான் - விரைவில் இந்தியா வருகிறது!

கொரோனா

புதன்கிழமை வரை இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் தத்தளிக்கும் இந்தியாவுக்கு 300 சுவாசக் கருவிகள் மற்றும் 300 ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வழங்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் கொரோனா வைரஸால் பாதிப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஆயிரங்களைத் தொட்டுள்ளது. புதன்கிழமை வரை இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தைக் கடந்துள்ளது. தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரையில் சுனாமி போல் வைரஸ் நாலாபுறமும் சுழன்று தாக்கி வருகிறது.

இதனால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளிலும், ஆட்டோ ரிக்ஷாக்களிலும் காத்துக்கிடக்கிடக்கின்றன. வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறப்பவர்களைக் காட்டிலும், உரிய சிகிச்சைக் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உற்றார், உறவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக காத்துக்கிடக்கும் அவல நிலை இருப்பதால், சில இடங்களில் இறப்பவர்களின் உடலைக்கூட வாங்க ஆள் இல்லாத சூழல் தலைநகர் டெல்லியில் உள்ளது.

அத்தகையவர்களின் உடலை சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்று எரியூட்டி வருகின்றனர். மயானங்களின் உடலை எரிப்பதற்கு ஏற்கனவே தட்டுப்பாடு இருப்பதால், பல உடல்கள் டோக்கன் அடிப்படையில் வரிசைக் கட்டி வைக்கப்பட்டிக்கின்றன. கொடூரத்தின் உச்சம் என்னவென்றால், இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு சில மயானங்களில் கான்டிராக்டர்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக கூறப்படுகிறது. அதற்கான தொகை செலுத்த முடியாதவர்கள், ஏற்கனவே எரியூட்டப்பட்ட இடத்தில் இருக்கும் எஞ்சிய விறகுகளை பொறுக்கி தங்கள் நேசத்துக்குரியவர்களின் உடலை எரிப்பதாக கூறப்படுகிறது.

Also read... CoronaVirus : கேரளாவில் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு.. வாடகை வாகனங்களை ஆம்புலன்ஸாக மாற்றிய கொச்சி நபர்!

சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார பேரிடர்களின் ஒன்றாக மாறியிருக்கும் கொரோனா வைரஸின் 2வது அலையில் இருந்து இந்தியாவை மீட்க உலக நாடுகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சவுதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரையிலான இஸ்லாமிய நாடுகளும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை கவச உடைகள், ஆக்சிஜன்கள் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளன. இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆக்சிஜன் மற்றும் மருந்து உற்பத்திக்கான மூலப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன. அந்த வகையில் தற்போது ஜப்பானும் இந்தியாவுக்கு கொரோனா நிவாரணத்தை அறிவித்துள்ளது.

300 ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் மற்றும் 300 சுவாசக் கருவிகளை இந்தியாவுக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும், இது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நிறைவடைந்தவுடன், இந்தியாவுக்கான உதவிப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என அந்நாடு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: