3 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்கும் சட்டம் ஜப்பானில் நிறைவேற்றம்

இளம் தொழிலாளர்கள் மிகக்குறைவாக உள்ளது ஜப்பானில் மிகப்பிரச்னையாக இருந்து வரும் நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்கும் முறை பெரும் எதிர்ப்பார்ப்பை  உருவாக்கியுள்ளது.

news18
Updated: December 9, 2018, 10:16 PM IST
3 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்கும் சட்டம் ஜப்பானில் நிறைவேற்றம்
மாதிரிப் படம்
news18
Updated: December 9, 2018, 10:16 PM IST
ஜப்பானில் பணி நிமித்தமாக சுமார் 3 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

ஜப்பானின் இந்த சட்ட மசோதா மூலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் கட்டுமானம், விவசாயம் மற்றும் நர்சிங் துறையில் பெருமளவிலான வெளிநாட்டினர் வேலை செய்ய அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். இதன் வாயிலாக சுமார் 3 லட்சம் வெளிநாட்டினர் இத்துறைகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், இந்த அனுமதியால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படக்கூடும், அவர்களது வருமானம் குறையக்கூடும் என அந்நாட்டின் எதிர்க்கட்சி தரப்பு விமர்சித்திருக்கின்றது.

உலக அளவில் வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக உள்ள ஜப்பானில் சராசரி ஆயுள்காலம் 85.5 ஆக உள்ளது. மேலும், இளம் தொழிலாளர்கள் மிகக்குறைவாக இருப்பது அந்நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்கும் முறை பெரும் எதிர்ப்பார்ப்பை  உருவாக்கியுள்ளது.

Also watch

First published: December 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...