மக்கள்தொகை மற்றும் நகர்ப்புற மயமாதல் பிரச்சனை ஜப்பான் நாட்டில் வித்தியாசமான முறையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உள்ளூர்களில் வேலை கிடைக்காமல் பெருநகரங்களில் வேலைத் தேடி செல்லும் சூழல் கடந்த பல ஆண்டுகளாக காணப்படுகிறது. இதன் தாக்கமாக கிராமப்புறங்களை விட நகரங்களில் மக்கள் தொகை அடர்த்தி அதிகரித்து நகர்புறங்கள் நெரிசலான நிலைமை கண்டு வருகின்றன.
அதேவேளை, ஜப்பான் நாட்டிலோ இது போன்ற நிலைமை வேறு விதமாக உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் மக்கள் தொகை உயர்வு கடந்த சில ஆண்டுகளாக தேக்கம் கண்டதால், இளம் தலைமுறை எண்ணிக்கை குறைந்தும் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தும் காணப்படுகிறது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் குடியேறியவர்கள் அதிகம் உள்ள நிலையில், கிராமப்புறங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையும் இளைஞர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது.
கோவிட் தாக்கம் இந்த சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் தலைநகர் டோக்கியோவை மையமாகக் கொண்டே இருப்பதால், இந்த பிரச்னையை சீரமைக்க அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தலைநகர் டோக்கியோ அதை சுற்றியுள்ள நகர்புறங்களில் வசிப்பவர்கள் கிராமப்புறங்களில் குடியேற்றம் செய்ய அரசு சிறப்பு உதவித்தொகை வழங்குகிறது.
இதையும் படிங்க: உச்சம் தொட்ட விலை... கனடாவில் வெளிநாட்டவர் வீடு வாங்க தடை - புதிய சட்டம் அமல்!
குறைந்தது ஐந்து ஆண்டுகாலம் டோக்கியோவில் வசித்தவர்கள் இந்த திட்டத்தில் விண்ணிப்பிக்காலம். அவர்களின் குடும்பத்தில் உள்ள 18 வயது அதற்கும் குறைவான சிறார்களுக்கு தலா ஒரு மில்லியன் யென் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6.36 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், உள்ளூரில் தொழில் தொடங்கி வாழ சிறப்பு மானியங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டில் 71 பேர் டோக்கியோவை விட்டு குடியேறியுள்ளனர். 2021ஆம் ஆண்டில் 1,184 பேர் குடிபெயர்ந்துள்ளனர். 2027ஆம் ஆண்டுக்குள் சுமார் 10,000 பேரை கிராமங்களுக்குள் குடியமர்த்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜப்பான் நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 12 கோடியாகும். இதில் 3.5 கோடி அதாவது சுமார் 28 சதவீதம் மக்கள் தலைநகர் டோக்கியோவில் தான் வசிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.