ஹோம் /நியூஸ் /உலகம் /

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் மானியம்.. சூப்பர் சலுகை அறிவித்த ஜப்பான்!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் மானியம்.. சூப்பர் சலுகை அறிவித்த ஜப்பான்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஜப்பான் நாட்டில் புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inte, Indiatokyotokyo

உலக அளவில் மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல ஆண்டுகளாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், இந்த மக்கள் தொகை உயர்வு என்ற நிலை சர்வதேச நாடுகளில் இடையே மாறுபட்ட சூழலில் தற்போது உள்ளது. பல நாடுகளில் சுமார் 15-20 ஆண்டுகள் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவாக தற்போது பிறப்பு இறப்பு விகிதாச்சாரத்தில் புதிய சிக்கலை கண்டுள்ளனர்.

அதற்கு சீனா முக்கிய உதாரணமாக உள்ளது. சீனாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக மக்கள்தொகை கட்டுப்பாடு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டின் கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை இளையோரை விட அதிகமாக உள்ளது. விளைவாக, அந்நாட்டில் வருவாய் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கையும், பிறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

எனவே, கடந்த ஆண்டுகளாக சீனாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசே ஊக்கத் தொகை மானியங்களை வழங்கி வருகின்றது. சீனாவைப் போலவே ஜப்பானிலும் தற்போது அத்தகைய நிலை உருவாகியுள்ளது. அந்நாட்டிலும் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு புள்ளி விவரப்படி, ஜப்பானில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: 18 முதல் 25 வயதினருக்கு ஆணுறை இலவசம் - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

எனவே, அந்நாட்டில் பெற்றோருக்கு குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு நிதி உதவி வழங்கி ஊக்கமளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 5 லட்சம் யென் உதவித்தொகை அதாவது, இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் அரசு வழங்குகிறது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் நிதி அமைச்சர் கட்சுனோபு கட்டோ வெளியிட்டார்.ஏற்கனவே, பின்லாந்து, எஸ்தோனியா, இத்தாலி,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதிதாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள சலுகைகளையும், மானியங்களையும் வழங்கி வருகிறது.

First published:

Tags: Child, Japan