வெள்ளத்தோடும் போராடும் ஊஹான்: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீன, ஜப்பான் தெற்குப் பகுதிகள் (வீடியோ)

ஜப்பானில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆஷிகிதா நகரில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் 2 பேர் உயிரிழந்தனர். 13 பேரை காணவில்லை.

வெள்ளத்தோடும் போராடும் ஊஹான்: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீன, ஜப்பான் தெற்குப் பகுதிகள் (வீடியோ)
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஜப்பான்
  • Share this:
சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியிலும் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து சீனா மீண்டுவரும் நிலையில், முதன்முதலாக கொரோனா கண்டறியப்பட்ட ஹுபெய் மாகாணம் தற்போது வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கனமழையைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான Three Gorge-ல் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உலகிலேயே மிக நீளமான ஒரே நாட்டிற்குள் பாயும் யாங்சி நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


ஊஹான் உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் 25000 தீயணைப்பு வீரர்கள், 4200 பொதுமக்களை மீட்டனர்.

சீனாவில் ஜூன் மாதம் மட்டும் கனமழை வெள்ளத்தால் 106 பேர் உயிரிழந்துள்ளனர். 13000 வீடுகள் சேதமடைந்த நிலையில், ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹுபெய் வெள்ளம்


இந்நிலையில், யாங்சி ஆற்றில் வெள்ள நீர் அபாய அளவை தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஜப்பான் நாட்டின் குமாமோட்டோ மற்றும் ககோஷிமா பகுதிகளில் கனமழை வெள்ளத்தால் 75,000 மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

*edit*#China, a valley city rests under several metres of water a few hundred km downstream from the #3gorgesdam

#XiJinping's lust for power has cost him the "Mandate of Heaven", the goddess of the yellow river has unleashed her furry onto the heartland of the Hans.#Weather pic.twitter.com/J6tQYGqUL0


— Harry Chen PhD (@PhdParody) June 28, 2020

 

 


எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆஷிகிதா நகரில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் 2 பேர் உயிரிழந்தனர். 13 பேரை காணவில்லை. ஜப்பானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 8000 வீடுகளில் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading