தப்பு செஞ்சு சிக்கிய பலரும் ஜெயிலுக்கு செல்வதை தவிர்க்க பல வழிகளை முயற்சித்து தப்பிக்க நினைப்பார்கள். இது தான் உலக வழக்கம். இருந்தாலும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர் ஒருவர், என் மனைவி தொல்லை தாங்க முடியல என்னைய தயவு செஞ்சு ஜெயிலில் அடைச்சுருங்க என ஒருவர் காவல்துறையினருக்கு வினோத கோரிக்கையை வைத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நம்பினால் நம்புங்கள் இது நிஜம் தான்!
மனைவியோட ஒன்னா இருக்கறதுக்கு சிறைச்சாலையே மேல், என சிலர் வேடைக்கையாக சொல்வதுண்டு. ஆனால் இங்கு ஒருவர் உண்மையிலேயே இதே கோரிக்கையோடு போலீஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டிருக்கிறார்.
இத்தாலியின் ரோம் நகரை ஒட்டிய கைடோனியா மாண்டெசெலியோ எனும் நகரில் வசித்து வரும் அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதாகும் நபர் ஒருவர், எனது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை, தயவு செஞ்சு என்னய சிறைச்சாலையில் அடைத்துவிடுங்கள் என்ற கோரிக்கையுடன் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.
Also read: இந்தியாவுடனான T20 போட்டி குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்!
இது குறித்து காவல்துறை அதிகாரியான ஜியாகொமோ ஃபெரண்ட் கூறுகையில், “30 வயதாகும் அந்த நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்த நபர் ஏற்கனவே பல மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார், அவரின் தண்டனை காலம் முடிவதற்கு மேலும் பல ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த அந்த நபர் தனது வீட்டில் இருந்து திடீரென தப்பித்து போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசாரை சந்தித்து, இனிமேலும் என்னால் வீட்டில் இருக்க முடியாது, என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வீடு எனக்கு நரகம் போல உள்ளது.
Also read: தன்னைவிட 13 வயது குறைந்த ஆட்டோ டிரைவருடன் மாயமான கோடீஸ்வரரின் மனைவி..
இனிமேலும் என்னால் என் மனைவியுடன் ஒன்றாக இருக்க முடியாது. தயவு செய்து என்னை சிறைச்சாலையில் போட்டு விடுங்கள். என்னுடைய தண்டனை காலத்தை நான் சிறையிலேயே கழிக்கிறேன்” என எங்களிடம் (போலீஸ்) கோரிக்கை வைத்தார்.
ஆனால், அவர் வீட்டில் இருந்து தப்பித்ததால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் கோரியது போலவே சிறையில் அடைத்துவிட்டோம் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Husband jailed, Husband Wife, Italy