ஹோம் /நியூஸ் /உலகம் /

உலக வங்கியின் புதிய தலைவராகும் இவான்கா ட்ரம்ப்?

உலக வங்கியின் புதிய தலைவராகும் இவான்கா ட்ரம்ப்?

இவான்கா ட்ரம்ப்

இவான்கா ட்ரம்ப்

உலக வங்கியின் பெரும்பாலான ஷேர் அமெரிக்காவிடமே உள்ளது. இதனால், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இவான்கா

உலக வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஐக்கிய நாடுகளின் சபையின் அமெரிக்காவிற்கான முன்னாள் தூதர் நிக்கி ஹாலே உள்ளார்.

இவர்களில் ட்ரம்பின் மகள் இவான்காவுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. உலக வங்கியின் பெரும்பாலான பங்குகள் அமெரிக்காவிடமே உள்ளன. இதனால், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்  எனத் தெரிகிறது. மேலும், அமெரிக்கா சார்பில் முன்னிறுத்தப்படுபவரின் பெயருக்காகவும் உலக வங்கி காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக வங்கியின் பெரும்பாலான தலைவர்கள் அமெரிக்காவினாலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், 12 தலைவர்கள் பதவி வகித்த உலக வங்கியின் தலைவராக இவான்கா ட்ரம்ப் வருவார் என்றே செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவான்கா ட்ரம்ப், தற்போது ட்ரம்ப் நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். கூடுதலாக அவருடைய ஃபேஷன் ஸ்டோரையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு பதிலாக ஷுப்மான் கில், விஜய் ஷங்கர் சேர்ப்பு...

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump