முகப்பு /செய்தி /உலகம் / டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் காலமானார்

டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் காலமானார்

டொனால்டு-இவான ட்ரம்ப் தம்பதியின் இளம் வயது புகைப்படம்

டொனால்டு-இவான ட்ரம்ப் தம்பதியின் இளம் வயது புகைப்படம்

Ivana Trump - டொனால்டு ட்ரம்ப் - இவானா தம்பதிக்கு டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், இவங்கா ட்ரம்ப், எரிக் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் முதல் மனைவி இவானா ட்ரம்ப் உயிரிழந்தார். 73 வயதான இவானா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்துவந்தார். தனது மனைவியின் இறப்பை முன்னாள் அதிபர் ட்ரம்ப் தான் பிரத்தியேகமாக உருவாக்கிய சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் தனது பதிவில் கூறியதாவது, 'இவானா ட்ரம்ப் தனது இல்லத்தில் காலமானார். மிகச்சிறந்த அழகான அற்புதமான பெண் அவர். ஒரு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தவர். எங்கள் இருவரின் மூன்று குழந்தைகளான டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், இவங்கா, எரிக் ஆகியோரே இவானாவின் பெருமையும் மகிழ்ச்சியும். தனது குழந்தைகள் மீது அளப்பரிய மதிப்பு வைத்திருந்தவர். இவானாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்' எனப் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

இவானா-டொனல்டு ட்ரம்ப் தம்பதியினரின் மகளான இவாங்க ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், 'எனது அம்மாவின் மறைவால் மனமுடைந்துள்ளேன். அவர் அறிவு,ஆற்றல், குதூகலம் என பல சிறந்த குணங்களை கொண்டவர். எந்த ஒரு சூழலிலும் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் அவர் இழந்ததில்லை. அவரை நான் இழந்துவாடுகிறேன். அவரின் நினைவுகள் என் மனதில் நீங்காது நிலைத்திருக்கும்' என்றுள்ளார்.

செக் ரிபப்ளிக் நாட்டில் பிறந்தவரான இவானா ட்ரம்ப், 1977ஆம் ஆண்டில் அப்போது தொழிலதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் அறிமுகமானார். பின்னர் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்து கொண்டனர். 1978ஆம் ஆண்டில் இருவருக்கும் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் முதல் குழந்தையாகப் பிறந்தார். பின்னர் 1981ஆம் ஆண்டு மகள் இவாங்காவும், 1984ஆம் ஆண்டில் மூன்றாவதாக மகன் எரிக்கும் பிறந்தனர்.

டொனால்டு பிரபல தொழிலதிபர் என்ற நிலையில், அவரது மனைவி இவானாவும் ட்ரம்ப்பின் தொழில்களில் பங்கெடுத்து கணவரின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றார். இருவருக்கும் இடையே 1992இல் விவாகரத்து ஆனாது. ஹாலிவுட் நடிகையான மர்லா மப்லேஸ் என்பவருடன் டொனால்டு ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட உறவே இதற்கு காரணம்.

இதையும் படிங்க: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்.. தாய்லாந்து அரசு முடிவு

1993ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் மப்லேஸ்சை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 1999ஆம் ஆண்டு ட்ரம்ப் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த நிலையில், 2005ஆம் ஆண்டு மெலேனியா ட்ரம்ப் என்பவரை மூன்றாவதாக மணம் முடித்துக்கொண்டார். விவகாரத்துக்குப் பின்னரும் இவானா ட்ரம்ப் தொழில் வாழ்க்கையை தொடர்ந்து வெற்றிகரமாக செய்துகொண்டிருந்தார்.

First published:

Tags: Donald Trump, Ivanka Trump