பிரிட்டனில் வெற்றிக் கனியைத் தட்டிச் சென்றார் போரிஸ் ஜான்சன்! பிரதமர் மோடி வாழ்த்து

பிரிட்டனில் வெற்றிக் கனியைத் தட்டிச் சென்றார் போரிஸ் ஜான்சன்! பிரதமர் மோடி வாழ்த்து
போரிஸ் ஜான்சன்
  • News18
  • Last Updated: December 13, 2019, 11:24 AM IST
  • Share this:
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெற்றிக் கணக்கை தொழிலாளர் கட்சி முதலில் தொடங்கியது.

Newcastle upon Tyne Central தொகுதியில் தொழிலாளர் கட்சியின் Chi Onwurah 12,278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தொடக்கத்தில் தொழிலாளர் கட்சியின் கைஓங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெற்றது.


பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில் சற்றுமுன் நிலவரப்படி அந்தக் கட்சி 354 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி 202 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

அந்தக் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சன் தான் போட்டியிட்ட தொகுதியில் வென்றுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவில் மக்கள் உறுதியாக உள்ளதை தேர்தல் முடிவு காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பொதுத்தேர்தலில் வெற்றி போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Also see...
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading