பிரபல ஹாலிவுட் படங்களில் மாஃபியா கும்பல் கதைகள் என்றாலே அது இத்தாலிய மாஃபியா கும்பலை பற்றியதாகவே இருக்கும். அதன் பாஸ் ஒரு இத்தாலியராகவே நாம் பார்த்திருப்போம். அதேபோல், திரைப்படங்களில் சர்வதேச நிழல் உலக கதைகளில் மாஃபியா கும்பலின் கில்லாடியான தலைவனை காட்பாதர், பீஸ்ட், டெவில் என பல பட்டப்பெயர்களை அழைப்பது வழக்கம்.அப்படித்தான் 30 ஆண்டு காலம் சர்வதேச நிழல் உலகை ஆட்டிப்படைத்த இத்தாலிய மாஃபிய கும்பல் தலைவன் மதேயோ மெஸினா டெனேரோ எதிர்பாராத விதமாக போலீசாரிடம் மாட்டியுள்ளார்.
60 வயதானா மதேயோ டெனேரோவை இத்தாலியின் மிகவும் தேடப்படும் கிரிமினல் குற்றவாளி ஆவார். 14 வயதிலேயே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு பழக்கமான டெனேரோவின் தந்தையும் ஒரு மாஃபிய கும்பலை சேர்ந்தவர். 20 வயதிலேயே நிழல் உலக செயல்பாடுகளில் களமிறங்கிய டெனேரோ தனது எதிரி மாஃபியா கும்பல்களை தீர்த்து கட்டி இத்தாலியின் அச்சுறுத்தும் மாஃபியாவாக உருவெடுத்தான். 1993ஆம் ஆண்டில் ரோம், மிலன், ப்ளாரன்ஸ் ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இவனது நிழல் உலக சாம்ராஜ்ஜியம் தென் அமெரிக்க நாடுகள் வரை பரவியது. தனது எதிரி மாஃபியா கும்பலை மட்டுமல்லாது அவரது உறவினர்களையும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான் இந்த டெனேரோ. 30 வருடங்களுக்கு மேலாக போலீசுக்கு தண்ணி காட்டி வந்த இவன் தனக்கு தி டெவில்(The Devil) என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆம், துணிவு படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயரான அதே 'டெவில்' தான்.
இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் பாணியில் இளைஞர் கழுத்து அறுத்து கொலை.. குடியரசு தின விழாவிற்கு முன் டெல்லியில் பகீர் சம்பவம்
சமீப காலமாக டெனேரோவுக்கு உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டதால் இத்தாலியில் உள்ள சிசிலி மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த தகவல் இத்தாலி போலீசாருக்கு கசிந்த நிலையில், மருத்துவமனையில் வைத்து டெனேரோவை இத்தாலி காவல்துறையினர் அசால்டாக கைது செய்துள்ளனர். அவனை கைது செய்து வெளியே அழைத்து வந்த போது அங்கிருந்த மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
டெனேரோவின் கைது நடவடிக்கை நாட்டில் திட்டமிட்ட கிரிமினல் குற்றங்களை நடத்தும் கும்பல்களுக்கு எதிரான போரில் கிடைத்த மாபெரும் வெற்றி என இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boss, Crime News, Italy, Mafia