இத்தாலியின் பின் தங்கியுள்ள கிராமங்களில் டிஜிட்டல் நோமட்ஸ் பணிபுரிவதை ஊக்குவிக்கும் வகையில், ‘டிஜிட்டல் நோமட்’ என்ற விசா நடைமுறையை அறிமுகம் செய்ய இத்தாலி திட்டமிட்டு வருகிறது. இந்த விசாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கடந்த வாரம் சட்டமாக கையெழுத்திடப்பட்டுள்ளது என்று ‘தி லோக்கல்’ ஊடகம் தெரிவிக்கிறது.
நோமெட் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்பவர்கள் அல்லது நாடோடிகள் என்று அர்த்தமாகும். இத்தாலியில் பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய விரும்பும் பணியாளர்கள் மற்றும் ஃப்ரிலான்சர்கள் போன்றோருக்கு தற்போதைய விசா நடைமுறைகள் எளிதானதாக இல்லை. இதனால், அவர்களுக்கு உதவும் நோக்கில் நோமட் விசாவை இத்தாலி அறிமுகம் செய்கிறது.
டெக்னாலஜி டூல்ஸ்-களை பயன்படுத்தி தகுதிவாய்ந்த பணிகளை மேற்கொள்ளும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத குடிமக்களை பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய அனுமதிக்கும் விதமாக இந்த விசா கொண்டு வரப்படுகிறது என்று இத்தாலி செய்தி ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தாலியைச் சேராத நிறுவனங்களுக்காக அந்தப் பணியாளர்கள் பணி செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விசா அனுமதி காலம் :
நோமட் விசாவின் படி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத குடிமக்களுக்கு ஓராண்டு பெர்மிட் உடன் விசா வழங்கப்படும். அதே சமயம், அதை அவர்கள் மிக எளிமையாக நீட்டித்துக் கொள்ளலாம். இந்த பெர்மிட் வழங்கும்போது, உயர் தகுதி உடைய பணியாளர் பிரிவுகள், குறைந்தபட்ச ஊதிய வரம்பு, அவர்களது பணி நடவடிக்கைகளை வெரிஃபை செய்வது போன்றவற்றுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இத்தாலி அரசு உருவாக்கி வருகிறது.
Also Read : அம்மா சொர்க்கத்தில் சந்திக்கிறேன்.. போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி உருக்கமான கடிதம்
டிஜிட்டல் நோமட் விசா - விரிவான விளக்கம் :
கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் நாம் பணிபுரியும் விதம் வெகுவாக மாறியுள்ளது. பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிவதும் தற்போது சாத்தியமாகியுள்ள நிலையில், குறிக்கப்பட்ட ஒரே இடத்திற்குப் பதிலாக விரும்பிய இடத்தில் இருந்து பணி செய்வதையே பலரும் விரும்புகின்றனர். இதுபோன்ற நபர்களை தற்போதைய உலகம் ‘டிஜிட்டல் நொமெட்’ என வரையறை செய்கிறது. இவர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி, நாடோடி வாழ்க்கை முறையில் விரும்பிய இடங்களில் இருந்து பணி செய்வார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் புது விசா அறிமுகம் செய்யப்படுகிறது.
Also Read : குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க வைக்கும் உக்ரைன் தாய்மார்களின் பதிவுகள்!
பிற நாடுகள் :
இத்தாலிக்கு முன்பே ஒருசில நாடுகள் இந்த விசாவை அறிமுகம் செய்துள்ளன. ஹங்கேரி, ஜெர்மனி, குரோஷியா, போர்ச்சுகல், எஸ்டோனியா, நார்வே, மால்டா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த விசா நடைமுறையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டின் பொருளாதார சூழலை மீட்டெடுக்கும் வகையில் இந்த விசாவை இந்நாடுகள் அமல்படுத்தியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.