ஹோம் /நியூஸ் /உலகம் /

வீடு காலி செய்வதில் தகராறு.. பிரதமரின் தோழியை துப்பாக்கியால் சுட்ட நபர்.. இத்தாலியில் பரபரப்பு சம்பவம்!

வீடு காலி செய்வதில் தகராறு.. பிரதமரின் தோழியை துப்பாக்கியால் சுட்ட நபர்.. இத்தாலியில் பரபரப்பு சம்பவம்!

துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்களில் ஒருவர் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் நண்பர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஞாயிற்றுக்கிழமை வடக்கு ரோமில் உள்ள ஒரு மதுக்கடையில் ஒரு நபர்  மூன்று  பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

57 வயதான கிளாடியோ காம்பி என்பவர் இத்தாலி தலைநகர் ரோமில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர். நவம்பரில், அவர் ஒரு வலைப்பதிவை எழுதியிருந்தார். அதில் தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தை நிர்வகிப்பவர்கள் தன்னை தனது தங்குமிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக அவர் தான் குடியிருந்த வீட்டு  குடியிருப்பாளர்கள் சங்கத்துடன் தொடர் தகராறில் ஈடுபட்டதாக இத்தாலிய ராய் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 1 கோடி சம்பளம் ஆனால் வேலையே இல்லையாம்..! அந்த ஊழியர் என்ன செய்தார் பாருங்கள்..!

அது போல் திடீரென்று சங்க கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்த  அறைக்குள் வந்து கதவை மூடிவிட்டு அங்கிருந்த அனைவரையும் சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். அதுவே பின்னர் தகராறாக மாறியது.

அந்த தகராறில் சண்டையிட்டு கொண்டிருந்த போது மூன்று பெண்களை அவர் சுட்டதாகத்  தெரிகிறது. இந்த தாக்குதலில் மூன்று பேருமே உயிரிழந்தனர். மேலும் அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  நான்கு பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்களில் ஒருவர் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் நண்பர் என்பது பின்னர் தெரியவந்தது .

பிரதமரின் நண்பரான 50 வயதான கோலிசானோ,  ஒரு 10 வயது சிறுவனின் தாயார், அவர் கூட்டத்தில் பொருளாளராக கலந்து கொண்டார்.

இதையும் படிங்க:டெல்லி மெட்ரோ ரயிலில் டவல் கட்டி கொண்டு ஏறிய நபர்..! வைரலான வீடியோ..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மெலோனி ''கோலிசானோ பாதுகாப்பான தாய், நேர்மையான மற்றும் விவேகமுள்ள நண்பர், வலிமையான  பெண்" என்று கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து குடிருப்பில் தங்கி இருந்த மற்ற நபர்கள் அவரை பிடித்து அடிக்கத் தொடங்கி விட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காம்பியை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரோம் மேயர் ராபர்டோ குவால்டிரி   அவசர பாதுகாப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, "நகரத்தில் நடந்த சம்பவம் நகரத்தில் வாழும் மக்களிடையே பெரும் பதற்றத்தையும்  பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பயத்தை போக்கும் வழிகளை மேற்கொள்ளவேண்டும் " என்று விவாதித்தார்.

First published:

Tags: Italy, Shot dead