ஹோம் /நியூஸ் /உலகம் /

''நீங்க வந்தா மட்டும் போதும்.. வீடு, கல்யாணம் எல்லாம் எங்க செலவு'' - இத்தாலி அரசின் அதிரடி திட்டம்

''நீங்க வந்தா மட்டும் போதும்.. வீடு, கல்யாணம் எல்லாம் எங்க செலவு'' - இத்தாலி அரசின் அதிரடி திட்டம்

இத்தாலி

இத்தாலி

லாசியோ என்ற ஊரில் திருமணம் செய்து கொண்டால், ரூ 1.67 லட்சம் பரிசாக வழங்க முன்வந்திருக்கிறது, இத்தாலி அரசு. 

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • interna, IndiaItalyItalyItaly

  வெளிநாட்டு மக்கள் தங்கள் நாட்டில் குடியேறவும், திருமணம் செய்து கொள்ளவும் பல லட்சம் ரூபாய் பணத்தை அள்ளித் தருகிறது இத்தாலி அரசு. அதற்கு காரணம் என்ன தெரியுமா?

  இந்தியா, சீனா இடையே எதில் போட்டி நடக்கிறதோ இல்லையோ, ஒன்றில் மட்டும் தொடர்ந்து போட்டி நடக்கிறது. அதுதான் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது 35 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்திருக்கும் நாடுகள் இந்தியாவும், சீனாவும்தான். இதனால், இந்த இரு நாடுகளிலும் வீடு இல்லாமல் தவிக்கும் மக்களின் எண்ணிக்கையும், அன்றாட வருமானத்திற்கு வழியில்லாதவர்களும் பல கோடி பேர் உள்ளனர்.

  உலகிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாக விளங்கும் ரஷ்யாவில் கூட, இந்த அளவுக்கு மக்கள் தொகை பெருக்கம் இல்லை. உலக மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, ரஷ்யாவில் இருப்பது வெறும் 2 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகை மட்டுமே. அதன் காரணமாக, 10 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், 13 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அண்மையில் அதிபர் புதின் அறிவித்தார்.

  ரஷ்யாவைப் போலவே, குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மிக முக்கியமானது இத்தாலி. இதனால், தங்கள் நாட்டில் குறிப்பிட்ட நகரத்தில் குடியேறுவோருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

  வேடிக்கை பார்க்க அழைப்பு.. பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய தாலிபான் 

  ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் புக்லியா (Puglia) பிராந்தியத்தில் அமைந்திருக்கிறது, பிரெசிசி (Presicce) என்ற புகழ்பெற்ற நகரம். பிரமாண்ட தேவாலயங்கள், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பழங்கால கட்டிடங்கள் நிறைந்த நகரம் பிரெசிசி.

  இரவு, பகலோ எப்போது பார்த்தாலும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த நகரத்தில் தங்குவதற்குதான் அழைக்கிறது இத்தாலி அரசு. ஏனெனில், இந்த நகரத்தில் உள்ள பல வீடுகளும், கட்டிடங்களும் கடந்த சில ஆண்டுகளாக காலியாகவே இருக்கின்றன. குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்று மையத்தில் கூட பல வீடுகள் காலியாக இருப்பதாக கூறுகின்றனர் அதிகாரிகள்.

  இந்த நகரத்தில் வாழ்ந்த பல குடும்பத்தினர், பெருநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று குடியேறிவிட்டதுதான் இதற்கு காரணம். எனவே, குறைந்த காலக்கட்டத்தில் பெருவாரியான மக்களை ஈர்ப்பதற்காக, அங்கு குடியேறுவோருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ. 25 லட்சம்.

  இதுதான்யா ஜப்பானு.. கால்பந்து மேட்ச் முடிஞ்சதும் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்.. குவியும் பாராட்டுகள்.. 

  வீடு வாங்குவதற்கும், குடியேறுவதற்கு தேவையான அடிப்படை தேவைகளையும் செய்து கொள்வதற்காக, இந்த தொகையை பரிசாக வழங்குகிறது இத்தாலி அரசு. உண்மையைச் சொல்லப் போனால், இத்தாலியில் இந்த குறிப்பிட்ட நகரத்தில், இவ்வளவு பணத்தில் பெரிய பங்களாவையே வாங்கி விட முடியும்.

  அதற்கு முக்கிய காரணம், இந்த நகரங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தவிர, அதிநவீன வசதிகள் எதுவும் இருக்காது என்பதே. நவீன வாழ்க்கை முறைக்கு தேவையான வசதிகள் இல்லாததுதான், இங்கிருந்த மக்கள் வெளியே செல்வதற்கும், இங்குள்ள வீடுகள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுவதற்கும் முக்கிய காரணம். தொழில்நுட்பங்களை விட்டு ஒதுங்கி இருக்கவும், நகர வாழ்க்கையைத் தவிர்க்கவும் விரும்பும் மக்களுக்கு இந்த ஊர் ஒரு வரப்பிரசாதம்.

  அதேபோல், லாசியோ என்ற ஊரில் திருமணம் செய்து கொண்டால், ரூ 1.67 லட்சம் பரிசாக வழங்க முன்வந்திருக்கிறது, இத்தாலி அரசு. நம்மூர் விராட் கோலி - அனுஷ்கா, அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் - கன்யே உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணம் செய்து கொண்ட நாடு இத்தாலி.

  ட்விட்டரில் புளூ டிக் சேவை குறித்த அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க் 

  வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகள் பலவும் நிறைந்திருப்பதே, இங்கு பலரும் படையெடுக்க முக்கிய காரணம். புதுமண தம்பதிகளை ஈர்க்கும் இத்தாலியில், திருமணம் செய்து கொள்வதற்கான இடங்கள் அதிகமுள்ள பகுதி, லாசியோ.

  கொரோனாவுக்குப் பிறகு இப்பகுதிக்கு திருமணம் செய்து கொள்வோரின் வருகை குறைந்து, வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, இந்த நகரத்தில் மக்கள் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையியில் அறிவிக்கப்பட்டுள்ளது, இத்தகைய திருமண பரிசு. வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார் என்பார்கள். காரணம் அதற்கான செலவுகள். ஆனால், இத்தாலிக்கு போனால் இந்த இரண்டும் எளிதில் சாத்தியம்தான்.


  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Italy, Marriage