கொரோனா வைரஸ் தாக்கம்: இத்தாலி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் தொடரும் மரணங்கள்!

ஈரானில் இதுவரையில் 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம்: இத்தாலி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் தொடரும் மரணங்கள்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 24, 2020, 6:22 PM IST
  • Share this:
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் கொரோனாவின் தாக்குதல் மெல்ல குறைவதாகக் கூறப்பட்டாலும் இதர நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மாறவில்லை. இத்தாலியில் இதுவரையில் நான்கு பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். மொத்தம் 11 நகரங்கள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த இத்தாலியில் 11 நகரங்களைச் சார்ந்த 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகம் மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான மிலன் பேஷன் நிகழ்வு மற்றும் வெனிஸ் கார்னிவல் ஆகிய நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.


ஆப்கானிஸ்தானில் இதுவரையில் 3 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஈரானில் இதுவரையில் 8 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வைரஸ் பரவாமல் தடுக்க துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சுற்றுலாவுக்குத் தடை விதித்துள்ளனர்.

மேலும் பார்க்க: தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த அத்தியாயம் கேமிங்- முகேஷ் அம்பானி!
First published: February 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading