முகப்பு /செய்தி /உலகம் / விவாகரத்து கேட்ட மனைவியை பழிவாங்க 7 வயது மகனை கொலை செய்த தந்தை

விவாகரத்து கேட்ட மனைவியை பழிவாங்க 7 வயது மகனை கொலை செய்த தந்தை

Davide Paitone

Davide Paitone

சிறுவனின் தாத்தா கூறுகையில், அவன் தனது தந்தையிடம் செல்வதில் துளியும் விருப்பம் இல்லாமல் இருந்தான். நான் தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். ஆனால் அது பெரிய தவறாகி போய்விட்டது. நான் அவனை அனுப்பியிருக்கக் கூடாது என அழுதவாறே பேசினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விவாகரத்து வழக்கு தொடர்ந்த மனைவியை பழிவாங்கும் நோக்கில், தனது 7 வயது மகனை தந்தை ஒருவர் கொலை செய்ததுடன், மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தாலியின் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பைடோனி. இவருக்கு வயது 40. இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் இருந்தான். டேவிட் பைடோனிக்கும் அவரின் மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் டேவிட் பைடோனி மீது குடும்ப வன்முறை சட்டப்பிரிவில் போலீஸ் நிலையத்தில் அவரின் மனைவி புகார் அளித்தார். அத்துடன் டேவிட் பைடோனிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக குடும்ப நல நீதிமன்றத்தில் அவருடைய மனைவி விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார். இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். டேவிட் பைடோனின் மனைவியும், மகனும் தனியாக வசித்து வருகின்றனர். அலுவலகத்தில் சக நண்பரை கத்தியால் குத்த முயற்சித்த வழக்கில் டேவிட் பைடோனி வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டிருந்தார்.

Also read:  பெண்ணின் தலையில் எச்சில் துப்பி சிகையலங்காரம் செய்த பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் - அதிர்ச்சி வீடியோ

இருப்பினும், விவாகரத்து வழக்கின் போது கடந்த புத்தாண்டு தினத்தன்று தன்னுடைய 7 வயது மகனுடன் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட வேண்டும், என மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என டேவிட் பைடோனி வைத்த கோரிக்கையை ஏற்று, நீதிபதி அதற்கு அனுமதி அளித்திருக்கிறார்.

இருப்பினும் டேவிட் பைடோனின் மகன் தனது தந்தையிடம் செல்வதில் விருப்பமற்றவராக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது தந்தையிடம் செல்ல மாட்டேன் என அச்சிறுவன் தனது தாயிடமும், தாத்தா, பாட்டியிடமும் கெஞ்சியிருக்கிறார். இருப்பினும் நீதிமன்றம் ஆணையிட்டதால் வேறு வழியின்றி அவனை சமாதானப்படுத்தி அவர்கள் தந்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

Also read:  '15 நிமிஷம் பிரதமர் காத்திருந்தது ஒரு பிரச்னையா, ஆனா விவசாயிகள்' - விளாசும் சித்து

இந்நிலையில், வீட்டுக்கு வந்த தனது மகனை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த டேவிட் பைடோனி. சிறுவனின் உடலை அலமாரியில் மறைத்து வைத்துவிட்டு. தனது மனைவியின் வீட்டுக்கு சென்று உனது மகனை திரும்ப அழைத்து வந்துள்ளேன் என கூறி வெளியே வரவழைத்து கத்தியால் அவரை சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் பயந்து போன டேவிட் பைடோனி அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

இருப்பினும் காரில் சென்ற டேவிட் பைடோனியை சேஸிங் செய்து இத்தாலி போலீசார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். மனைவியை கத்தியால் குத்திய பின்னர், அவரின் மனைவியின் மொபைலுக்கு அனுப்பிய மெசேஜ்களில், என்னுடைய வாழ்க்கையை நீ நாசம் செய்ததாலும், என் மகனை பிரிக்க முயன்றதாலும் உன்னை குத்தியதாக மெசேஜ் அனுப்பியிருந்தார்.

Also read:  ‘மோடி வாழ்க’ என கோஷமிட்டு பாஜகவினரிடம் இருந்து விடுபட்ட பஞ்சாப் துணை முதல்வர் - வைரல் வீடியோ

இச்சம்பவம் குறித்து கொல்லப்பட்ட சிறுவனின் தாத்தா கூறுகையில், அவன் தனது தந்தையிடம் செல்வதில் துளியும் விருப்பம் இல்லாமல் இருந்தான். நான் தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். ஆனால் அது பெரிய தவறாகி போய்விட்டது. நான் அவனை அனுப்பியிருக்கக் கூடாது என அழுதவாறே பேசினார்.

First published:

Tags: Child murdered, Crime | குற்றச் செய்திகள், Divorce