காதல் கடந்து போகக் கூடியது இல்லை. அது கொண்டாடப்படக் கூடியது என்பதற்கு இந்த செய்தி சிறந்த உதாரணம்.
இத்தாலியில் அரசியல்வாதி நாடாளுமன்றத்தில் தீவிர விவாதங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் பொதுமக்கள் கேலரியில் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் எம்.பி ஒருவர் காதலைச் சொன்னது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நாடாளுமன்ற அவையில் நிலநடுக்கத்திற்குப் பிறகான புரணமைப்புப் பணி குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எம்.பியான ஃப்ளாவியோ டி மியூரோ தன்னுடைய வாதம் வந்த போது பொதுமக்கள் கேலரியில் அமர்ந்திருந்த தன்னுடைய பெண் தோழியிடம் திருமணம் செய்து கொள்வாயா? என்று திடீரென கேட்டு அவையில் இருந்தோரை ஆச்சரியப்பட வைத்தார்.
“நாட்டுக்கான நலன்களை செய்வதிலும் , அக்கறைக் கொள்வதிலேயே எப்போதும் கவனம் செலுத்துகிறோம். இதனால் தினமும் நமக்காக வாழ்வோரை, நம் மீது அன்பு செலுத்துவோரை , உண்மையான உறவுகளை கண்டுகொள்ளாமல் உதாசினம் செய்கிறோம். இன்று எனக்கு சிறப்பான நாள். எலிசா என்னை திருமணம் செய்து கொள்வாயா..?” என்று கையில் இருந்த காதல் மோதிரத்தை நீட்டி காதலியிடம் கேட்கிறார்.
Interviene sull'ordine dei lavori e dice: "Elisa, mi vuoi sposare?". Pare che la fortunata abbia risposti sì.
Auguri all'On. Flavio Di Muro, solidarietà al Presidente @Roberto_Fico perché deve gestire l'Aula nella legislatura più trash della storia d'Italia. pic.twitter.com/vk1Vy8kT1n
— Antonello Mastino (@mastaccio) November 28, 2019
உடனே அருகில் இருந்தவர்கள் உற்சாகத்துடன் கைகளைத் தட்டி அவரை ஊக்கப்படுத்துகின்றனர். உடனே சபாநாயகர், “உங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நாடாளுமன்றத்தை இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது மிகவும் தவறு” என்று கூறினார்.
இறுதியாக பத்திரிகையாளர்களை சந்தித்த எம்.பியிடம் காதலி என்ன பதில் சொன்னார் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ’ஆம்’ என்று தெரிவித்தார். இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.