கொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொது இடத்தில் முத்தமிட்ட தம்பதிக்கு ரூ.34,000 அபராதம்

கொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொது இடத்தில் முத்தமிட்ட தம்பதிக்கு ரூ.34,000 அபராதம்

பொது இடத்தில் முத்தமிட்ட தம்பதி

இத்தாலியில் பொது இடத்தில் முத்தமிட்ட தம்பதிகளுக்கு காவல்துறையினர் 34,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா பாதிப்பு எவரையும் விட்டு வைக்கவில்லை, பலரையும் இந்த தொற்று இக்கட்டான சூழ்நிலைகளுக்குள் கொண்டு சென்றுள்ளது. பலரின் திருமண ஆசைகள், வேலை பற்றிய கனவுகள், சொந்த வீடு போன்றவற்றிற்கு ஒரு தடையை இந்தக் கொரோனா ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் விசித்திரமான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

இத்தாலியின் மிலனில் பொது இடத்தில் முத்தமிட்டதற்காக ஒரு ஜோடிக்கு 360 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,000க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது நகரத்தில் உள்ள கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை மீறும் நடவடிக்கை என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி, இத்தாலியயை சேர்ந்த 40 வயதான நபர் போலந்து நாட்டை சார்ந்த அவரது வருங்கால மனையை முத்தமிட நினைத்துள்ளார். இதனால் இருவரும் தெருவில் மாஸ்க்குகளை அகற்றிவிட்டனர். இதனை பார்த்த நான்கு போலீஸ் அதிகாரிகள் அந்த ஜோடியை சூழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது, தங்கள் இருவருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததற்கான ஆதாரத்தை அவர்கள் அதிகாரிகள் முன்பு காண்பித்துள்ளனர். இந்த ஜோடி ஒரு ஸ்மார்ட்போனில் நிச்சயதார்த்தம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளை தங்களின் உறவின் சான்றாகக் காட்டியது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து தங்களிடமிருந்த ஆவணங்களில் அவர்களின் முகவரிகளை கண்டறிந்த தொடர்ந்து விசாரித்தனர். இருவரின் அடையாளங்களையும் கண்டறிந்த பின்னர், இத்தாலிய அரசாங்கத்தின் விதிகளின்படி 360 டாலர் அபராதம் விதித்தனர்.

அந்நாட்டு உத்தரவின் படி, கொரோனா பரவலை தடுக்க மக்கள் பொதுவெளியில் மாஸ்குகளை அணிய வேண்டும் மற்றும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் ஒன்றாக வாழும் தம்பதிகளுக்கு பொருந்தாது.

முத்தமிட்டபோது அருகில் வேறு யாரும் இல்லாத போதிலும் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர், கடற்கரையில் தனியாக இருந்த ஒருவரை பிடிக்க ட்ரோன் பயன்படுத்தியதாகவும், அவருக்கு அபராதம் விதித்ததாகவும் இத்தாலிய போலீசார் விமர்சிக்கப்பட்டனர்.

காவல்துறையினர் பல நேரங்களில் எல்லை மீறுகிறார்கள் என்றும் சாதாரண செயல்களுக்கும் அபராதம் விதிப்பதாகவும் பலர் புகார் கூறினர். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமான நெருக்கடியை எதிர்கொண்ட ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி ஒன்றாகும். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை படுக்கைகள் தொடர்ந்து நிரப்பப்படுவதால் சுகாதார அமைப்புகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

Also read... கொரோனா குறித்த தவறான தகவல்களை நம்புவது இவர்கள் தான்... ஆய்வில் வெளியான தகவல்மதுக்கடைகள் மற்றும் ஆல்கஹால் விற்பனைக்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர்பு விளையாட்டுகள் பலவும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு பள்ளிகளால் சிறப்பு அட்டவணைகள் பின்பற்றப்பட்டு ஆன்லைன் கற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. பொது இடங்களில் உணவு பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகம் காணப்பட்டாலும், முன்பு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை போலவே ஊரடங்கு செய்யப்படுவதை அரசாங்கம் ஏற்றுகொள்ளவில்லை

அதிகாரிகள் நெருக்கடியை சமாளிக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது, கொரோனா கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ். ஒருபுறம் அதற்கான மருந்தை கண்டறிய சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அதிகாரிகளும் தொற்று அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த சிரத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய நமது கடமையை ஒரு சிலர் மீறுவதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுவதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published: