டெல்டா வகை கொரோனா பரவலால் தவிக்கும் இந்தோனேஷியா... சவப்பெட்டி தயாரிக்கும் தன்னார்வலர்கள்

டெல்டா வகை கொரோனா

தேவையை சமாளிக்க முடியாமல் சவப்பெட்டி செய்பவர்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவியாக தன்னார்வலர்கள் சவப்பெட்டிகளை தயாரித்து வருகின்றனர்.

 • Share this:
  இந்தோனேஷியாவில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால், சவப்பெட்டி தயாரிக்கும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்தோனேஷியாவில் இதுவரை 67 ஆயிரத்து 355 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் டெல்டா வகை கொரோனா அங்கு தீவிரமாக பரவி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் தேதியன்று இந்தோனேஷியாவின் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இரு மாதங்களுக்கு முன் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு மட்டும் இதுவரை 1800 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையை சமாளிக்க முடியாமல் சவப்பெட்டி செய்பவர்கள் திண்டாடி வருகின்றனர்.  இதனால் அவர்களுக்கு உதவியாக தன்னார்வலர்கள் சவப்பெட்டிகளை தயாரித்து வருகின்றனர்.

  ALSO READ |  தோல்விக்காக நிறவெறி வசையை ஒருபோதும் ஏற்க முடியாது: இங்கிலாந்து கோச் சவுத்கேட் காட்டம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: