ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும்- சுப்ரமணியன் சுவாமி

news18
Updated: February 12, 2018, 1:39 PM IST
ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும்- சுப்ரமணியன் சுவாமி
ராஜபக்சே
news18
Updated: February 12, 2018, 1:39 PM IST
ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராக வர வேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நேற்று முன் தினம்   341 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  நடைபெற்றது.  இந்த தேர்தலில் மொத்தம் 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.  தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை மக்கள் முன்னணி, அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

நேற்று இந்த தேர்தல் முடிவுகள் வெளியானது. ராஜபக்சவின் கட்சி 7,03, 117 வாக்குகள் பெற்று 909 இடங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 4,69, 986 வாக்குகளைப் பெற்று 459 இடங்களையும் பெற்றது. கிட்டத்தட்ட 45 சதவீத வாக்குகளை ராஜபக்சேவின் கட்சி பெற்றிருக்கிறது.

இந்நிலையில், `` உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மிக வலுவாக அரசியலில் மீண்டும் ராஜபக்சே தடம் பதித்துள்ளார் என்றும் ராஜபக்சே மீண்டும் அதிபராக வர வேண்டும் என்றும்’’ டிவிட்டரில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
First published: February 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்