• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • `ரியல் பெண்களை விட ஈஸியாக இருக்கிறது' - ஆபாச பொம்மையுடன் டேட்டிங் செய்யும் சீனர்!

`ரியல் பெண்களை விட ஈஸியாக இருக்கிறது' - ஆபாச பொம்மையுடன் டேட்டிங் செய்யும் சீனர்!

ஆபாச பொம்மையுடன் டேட்டிங் செய்யும் சீனர் ஒருவர், ரியல் பெண்களை விட பொம்மைகள் டேட்டிங் செய்வதற்கு ஈஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்

  • Share this:
ஹாங்காங்கில் வசித்து வரும் 36 வயதான ஷி தியான்ராங் (Xie Tianrong), ஆபாச பொம்மையுடன் டேட்டிங் செய்து வருகிறார். அந்த பொம்மைகளுக்கு ஐ போன் 12 உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசுகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார். பொம்மையை காயப்படுத்தும் என்பதால், இதுவரை பொம்மையிடம் அத்துமீறி அவர் நடந்தது இல்லை என்றும், ஒரு முத்தம் கூட தியான்ராங் கொடுத்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

பொம்மையின் உடல் பகுதிகளில் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக தனக்கு தானே சில நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு தியான்ராங் அந்த பொம்மையுடன் வாழ்ந்து வருகிறார். மோச்சி (Mochi) எனப் பெயரிட்டுள்ள அந்த பொம்மையுடன் ஷி தியான்ராங் நாள்தோறும் படுத்து உறங்குகிறார். அந்த பொம்மையை குளிப்பாட்டி, வெறும் உடம்புக்கு பவுடர் பூசி, அழகான உடைகளையும் அணிவித்து விடுகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் கடை ஒன்றில் பொம்மை ஒன்றை பார்த்தபோது, தனக்கு பொம்மைகள் மீது ஈர்ப்பு இருப்பதை அவர் தெரிந்து கொண்டார். 

அந்த பொம்மையின் விலை இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாயாக இருந்ததால் அதனை அவர் வாங்கவில்லை. பின்னர், 2019 ஆம் ஆண்டு இணையம் வழியாக மோச்சி பொம்மையை 10 ஆயிரம் யுவானுக்கு வாங்கியுள்ளார். அதிலிருந்து தற்போது வரை அந்த பொம்மையுடன் தன்னுடைய பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருகிறார். தியான்ராங்கிடம், உண்மையான பெண்களுடன் காதல் இருந்திருக்கிறதா? என கேள்வி எழுப்பியபோது, தனக்கு முன்னாள் காதலிகள் இருந்ததாகவும், அவர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் மட்டுமே கவனமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். 

இருவரும் ஒன்றாக இருக்கும் நேரங்களில் தன்னுடைய காதலிகள் தொலைபேசிகளில் மட்டுமே அதிகமான நேரங்களை செலவிட்டதால் தனக்கு அது பிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால், பொம்மை மோச்சி அவர்களில் இருந்து வேறுபட்டு தன் மீது முழுகவனத்தையும் செலுத்துவதாகவும் தியான்ராங் கூறியுள்ளார். ஆபாச  பொம்மையுடன் ஆண் ஒருவர் டேட்டிங் செய்வது முதன்முறையல்ல. கடந்த நவம்பரில் கஜகஸ்தான் (Kazakhstan) நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் ஆபாச பொம்மையுடன் 8 மாதம் டேட்டிங் செய்து அதனை திருமணம் செய்து கொண்டார்.  

மார்கோ (Margo) எனப் பெயரிட்ட அந்த பொம்மையுடன் திருமணம் செய்துகொண்ட வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அவரின் திருமண வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. முன்கூட்டியே ஆபாச பொம்மையுடன் அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போனது. ஒருவழியாக கடந்த நவம்பரில் பொம்மையை திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: