முகப்பு /செய்தி /உலகம் / இது வெறும் ட்ரைலர்தான்.. மங்கிபாக்ஸ் வைரஸ் குறித்து WHO புதிய எச்சரிக்கை

இது வெறும் ட்ரைலர்தான்.. மங்கிபாக்ஸ் வைரஸ் குறித்து WHO புதிய எச்சரிக்கை

மங்கிபாக்ஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மங்கிபாக்ஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Monkeypox - இப்போது நாம் பார்ப்பது ஒரு மாபெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே என மங்கிபாக்ஸ் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலக சுகாதார அமைப்பு மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு குறித்து உலக நாடுகளுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களிலேயே 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த மங்கிபாக்ஸ் வைரஸ் நோய் பரவியுள்ளது. இதுவரை சுமார் 300 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வைரஸ் பரவலை தொடர்ந்து கண்காணித்து வரும் உலக சுகாதார அமைப்பு(WHO) இந்த நோய் பாதிப்பு குறித்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டம் ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது. இதில் அமைப்பின், பெருந்தொற்று பரவல் தடுப்பு தலைவர் சில்வி பிரியான்ட் உறுப்பினர்களிடம் கூறுகையில், 'இந்த நோய் பரவலின் ஆரம்பக்கட்டத்தில் தான் நாம் தற்போது உள்ளோம். இனி வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கையானது நிச்சயம் அதிகரிக்கும். இப்போது நாம் பார்ப்பது ஒரு மாபெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே. அதேவேளை, இந்த பாதிப்பு கோவிட் போல மிக வேகமாக பொதுமக்களிடையே பரவாது. இது சற்றே நம்பிக்கை அளிக்கும் அம்சம்'என்றார்.

ஆப்ரிக்கா கண்டத்தில் மட்டுமே இந்த பாதிப்பு பரவலாக காணப்பட்டு வரும் நிலையில், முதன்முதலாக மே 7 ஆம் தேதி இந்த வைரஸ் பாதிப்பு பிரிட்டன் நாட்டில் பதிவானது. அதன் பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் என காட்டுத்தீயாய் பரவியுள்ளது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் 98 பாதிப்பும், பிரிட்டனில் 90 பாதிப்பும், போர்ச்சுகலில் 74 பாதிப்பும் இதுவரை பதிவாகியுள்ளது. அம்மை நோய்க்கு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இதன் பரவலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என முதல்கட்ட ஆய்வில் கெரிவந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த அம்மை நோய்க்கான தடுப்பூசியை அன்மை காலங்களில் பெரும்பாலானோர் செலுத்திக்கொள்வதில்லை.

இதையும் படிங்க: பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண்ணுடன் செக்ஸ் வைத்து வீடியோ எடுத்த விமானி

எனவே, இது மேற்கண்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் அம்மை நோய் தடுப்பூசி பரவலாக செலுத்தப்பட்டுள்ளதால் மங்கிபாக்ஸ் வைரஸ் பீதி தேவையில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆர் ஆகியவை ஒரு வாரமாக உஷார் நிலையில் உள்ளன.

First published:

Tags: Monkey B Virus, WHO