Home /News /international /

ஆபரேஷன் பிரேகிங் டான் - மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதல்.. காசா எல்லையில் பதற்றம்

ஆபரேஷன் பிரேகிங் டான் - மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதல்.. காசா எல்லையில் பதற்றம்

காசவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல்

காசவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல்

ஆபரேஷன் பிரேகிங் டான் என்ற பெயரில் காசா எல்லையில் ராணுவ தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நேற்று மீண்டும் போர் தாக்குதல் தொடங்கியுள்ளது. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினர் இஸ்ரேல் மக்களை தாக்க திட்டமிட்டதாகக் கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் படையினர் இந்த தாக்குதலை தொடங்கியுள்ளனர். ஆபரேஷன் பிரேகிங் டான் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது.

    சர்ச்சைக்குரிய காசா பகுதியில் பாலாஸ்தீன் அமைப்பினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக ராணுவத் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஜிஹாத் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த கமான்டர் தாய்சிர் அல் ஜபாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலில் ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பு தெரிவித்துள்ளது.


    இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் யாசிர் லாபிட் கூறுகையில், இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு தலைக்கு மேல் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. அதை தடுத்து மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, பயங்கரவாத அமைப்பினரை சரியாக குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.அதேவேளை, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தும் என உறுதியாக தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தைவானுக்கு எதிராக சீனா போர் பயிற்சி.. ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்ததால் பதற்றம்..

    இரு நாடுகளுக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய காசா பகுதியில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 365 சதுர கிமீ சுற்றளவு கொண்ட இந்த பகுதியை 2007ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு தன் வசம் கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து சுமார் ஐந்து முறை இரு நாடுகளுக்கு இந்த காசா பகுதியில் போர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக 2021ஆம் ஆண்டு மே மாதம் இரு தரப்பும் சுமார் 11 நாள்கள் ராணுவ மோதலில் ஈடுபட்டன.

    ஏற்கனவே, ரஷ்யா-உக்ரைன் போர், தைவான் விவகாரத்தில் சீனா ராணுவத்தின் நடவடிக்கைகள் போன்றவை உலக அமைதிக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் தான் தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன் மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Gaza Issue, Islamic Jihad Militant, Israel

    அடுத்த செய்தி