இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்திக் கொள்வதற்கே மக்களில் சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் 4-வது டோஸை செலுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற உலக நாடுகளைப் போலவே இஸ்ரேலிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மக்களும் முன்பைப் போல மாஸ்க்குகளை அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொது நிகழ்ச்சிகளைப் பொருத்தளவில் உள்ளரங்கில் நடைபெற்றால் 100 பேரும், வெளி அரங்குகளில் நடைபெற்றால் 50 பேரும் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் பெரும்பான்மையான மக்கள் 2 டோஸ்களை செலுத்தியுள்ள நிலையில் நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படுபவர்கள், 3வது டோஸை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
இந்த சூழலில் மிக எளிதாக பாதிக்கப்படுவோர் என்று கருதுபவர்கள் 4-வது டோஸை செலுத்திக் கொள்ளலாம் என்று இஸ்ரேல் அரசு இன்றைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 4வது டோஸை செலுத்திக் கொள்ள அனுமதி அளித்திருக்கும் முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் சில நபர்கள் 4-வது டோஸை செலுத்திக் கொண்டனர். நேற்றைய நிலவரப்படி இஸ்ரேலில் 4,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை
ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 65 லட்சம்பேர் முதல் டோஸை செலுத்திக் கொண்டதாகவும், 42 லட்சம்பேர் இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Also read: 10ல் ஒரு நபர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துகிறார் - தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Israel