• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: நெருப்பு பலூன்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: நெருப்பு பலூன்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு

கோப்புப் படம்

கோப்புப் படம்

காஸா நகர் மீது இஸ்ரேல் கடந்த மாதம் கடும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர், கட்டிடங்கள் தரைமட்டமாகின. உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. காஸா நகரில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், கட்டடங்கள் சேதம் அடைந்தன.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஒருங்கிணைந்த ஜெருசலேமின் அனைத்து பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என இஸ்ரேல் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இதுதொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலில், 260 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலை சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர். பின்னர் உலக நாடுகள் தலையிட்டதன் அடிப்படையில், மே 21ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தில் இருந்து தெற்கு இஸ்ரேலுக்கு சிலர் நெருப்பு பலூன்களை அனுப்பியதால், 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றியது.

    இதற்கு பதிலடியாக, காஸா நகரில், ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடத்தை நோக்கி, இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்பட்டுள்ளதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் பொறுப்பேற்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே மோதல் முடிவுக்கு வருமா என கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் படிக்க.. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும்  அதிகரிப்பு

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: