Gaza under attack | முன்னெச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் தாக்குதல்: வீடுகளை இழந்த காசா மக்கள் குழந்தைகளுடன் அலையும் அவலம்

இஸ்ரேல் தாக்குதலில் எரியும் காசா

இஸ்ரேலிய படைகள் காசா ஸ்ட்ரிப்பில் நுழைந்துள்ளன, வான்வழியாகவும் தாக்குதல் நடத்துவதையடுத்து காசா மக்கள் பீதியடைந்துள்ளனர், குழந்தைகளுடன் அலையும் அவலமான காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

  • Share this:
    மிகவும் சிறிய நகரம் என்பதால், எங்கு செல்வது என்பது தெரியாமல் பலர் மரண பயத்தில் உள்ளனர்.

    காசா பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும், 16 குழந்தைகள் உட்பட, 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எந்த முன்னெச்சரிக்கை யும் இல்லாமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், இந்த பகுதி மக்கள் மிரட்சியில் உள்ளனர்.
    இந்நிலையில் வான்வழித்தாக்குதல்கள் போதாதென்று இஸ்ரேல் படையினர் தரை வழியாகவும் காசாவுக்குள் நுழைந்துள்ளனர். ஹமாஸ் பிரிவினர் பாலஸ்தீனத்திலிருந்து ராக்கெட் வீச்சுத்தாக்குதல் நடத்தியதால் படைகளை அனுப்புகிறோம் என்கிறது இஸ்ரேல்.

    லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சுத் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. இது போதாதென்று யூதர்களுக்கும் அராபியர்களுக்கும்ம் இடையே வன்முறையும் வெடித்ததால் இஸ்ரேல் ராணுவம் இதைக் கட்டுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசா சின்னாபின்னம். | ஏ.பி. படம்.


    இது தொடர்பாக கவலை வெளியிட்ட அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்,  “இஸ்ரேல் தெருக்களில் நடக்கும் வன்முறைகள் கவலையளிக்கின்றன. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்களுக்கு சம அளவிலான சுதந்திரம் இருக்கிறது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

    வியாழன் இரவு தாக்குதல் உக்கிரமானதில் காசா வானில் தீப்பிழம்புகள் கிளம்பின, நெரிசலாக மக்கள் வாழும் காசா பகுதியில் இந்தத் தாக்குதல்களின் சேதம் இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை.

    தாக்குதல்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. எந்த நேரத்தில் தங்கள் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமோ என்ற பீதியில், காசா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்.
    இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை இப்போதைக்கு ஓய்வதாக இல்லாத நிலையில் தெருக்களில் யூதர்களும் முஸ்லிம்களும் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் அச்சமூட்டுகின்றன.

    இந்நிலையில் ரம்ஜான் தினமான இன்று இடிபாடுகளுக்கு இடையேயும் காசா மக்கல் தொழுகை நடத்தி வருகின்றனர்.
    திங்கள் முதல் 27 குழந்தைகள் உட்பட சுமார் 103 பேர் கொல்லப்பட்டதாகவும் 580 பேர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இஸ்ரேலில் ஒரு குழந்தை உட்பட7 பேர் பலியாகியுள்ளனர்.

    ஜெரூசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியருகே ஏற்பட்ட மோதல் இன்று பெரிய போராக வெடித்துள்ளது. இந்த அல் அக்சா மசூதி வளாகம் யூதர்கள், முஸ்லிம்கள் இருவருக்குமே புனித இடமாகும். கிழக்கு ஜெரூசலேத்திலிருந்து தொடர்ந்து பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படையினர் பலவந்தமாக வெளியேற்றியதிலிருந்து தொடங்கியது இந்தச் சண்டை.

    இஸ்ரேலில் வசித்து வரும் அராபியர்களை இஸ்ரேல் வலது சாரி கும்பல் தாக்கிவரும் வீடியோக்களும் வலம் வருகின்றன. இதை பாதுகாப்பு படையினர் தடுத்தால் அவர்களுடனும் வலதுசாரிகள் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
    Published by:Muthukumar
    First published: