ஹோம் /நியூஸ் /உலகம் /

4.2 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டும் பயனில்லை; கோவிட்-19 புயல் நெருங்கிவிட்டது - இஸ்ரேல் பிரதமர் கவலை

4.2 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டும் பயனில்லை; கோவிட்-19 புயல் நெருங்கிவிட்டது - இஸ்ரேல் பிரதமர் கவலை

Covid Vaccine

Covid Vaccine

கடந்த இரண்டு வாரங்களில் 700 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஞாயிறன்று 4,000ஐ கடந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய போதும் பயனில்லை, கோவிட் புயல் நம்மை நெருங்கி வருகிறது என இஸ்ரேல் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

2020, 2021 என இரண்டு ஆண்டுகளை முழுமையாக வாரி சுருட்டிய கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று, புதிய ஆண்டான 2022-லும் விடாமல் துரத்தி வந்து மனித வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் எனும் புதிய வகையான கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளின் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சமீபத்திய நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. பிற வேரியண்ட்களை விட ஓமைக்ரான் பரவும் வேகம் அசுரத்தனமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட அவர்களையும் கணிசமான அளவுக்கு இது தாக்கக்கூடியது என்பது மிரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read:  உணவில் இருந்த எலியின் கண்கள் - சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி

இந்நிலையில், சில நாடுகள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியைக் காட்டிலும் கூடுதலாக பூஸ்டர் டோஸ்களை பாதுகாப்பு கருதி தங்கள் தங்கள் மக்களுக்கு போட்டுள்ளனர். அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் 4.2 மில்லியன் மக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது. இருப்பினும் பூஸ்டர் தடுப்பூசி போட்டும் பயனில்லை என்ற வகையில் இஸ்ரேல் பிரதமர் பேசியுள்ளார்.

ஜெருசலேம் நகரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னெட் செய்தியாளர்களிடையே பேசுகையில், இஸ்ரேலின் மொத்தம் உள்ள 9.3 மில்லியன் மக்கள் தொகையில், 4.2 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதாவது 60% பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் கூட கொரோனா புயல் நம்மை நெருங்கியுள்ளது.

Also read:  தீவிர மதுவிலக்கை அமல்படுத்தும் தாலிபான்கள்.. 3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றி அழித்தனர்

கடந்த இரண்டு வாரங்களில் 700 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஞாயிறன்று 4,000ஐ கடந்துள்ளது. இது நமக்கு மிகவும் புதியதாக உள்ளது. பலவீனமானவர்களை பாதுகாத்தவாறே, நாட்டின் பொருளாதாரத்தை கூடுமான வரையில் தொடர்ந்து இயங்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். வரும் நாட்களில் சாதனை அளவுகளில் தினசரி பாதிப்பு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அளவுக்கதிகமான ஓமைக்ரான் பாதிப்புகளால் இஸ்ரேல் மக்களிடம் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகக் கூடும் என நாட்டின் உயர்ந்த மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலில் இதுவரை கொரோனாவால் 8,244 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Covid-19, Israel, Omicron