முகப்பு /செய்தி /உலகம் / இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்

Corona | கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல் பிரதமர் பென்னெட்டின் இந்திய பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.  இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில்,  நஃப்தலி பென்னட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read:  Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், வீட்டிலிருந்தவாறே அலுவலக பணிகளை செய்து வருவதாக, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பின் நப்தலி பென்னெட் முதன்முறையாக, வரும் 3-ம் தேதி இந்தியாவிற்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், பென்னெட்டின் இந்திய பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Corona positive, Corona Symptoms, Corona Vaccine, Covid-19, Isreal, Tamil News