இஸ்ரேலின் அடுத்தடுத்த பயங்கரத் தாக்குதல்: குண்டுமழையில் காசாவில் ஒரேநாளில் 42 பேர் பலி

இஸ்ரேல் குண்டுமழையில் தரைமட்டமான 15 மாடி காசா கட்டடம்.

காசா மீது இஸ்ரேல் 12க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதில் ஒரே நாளில் காசாவில் 42 பேர் பலியாகினர். ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின. ஏதோ பெரிய பூகம்பம் தாக்கியது போல் காசா நகரம் காட்சியளிப்பதாக அங்கிருந்து ஊடகச் ச்செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

  • Share this:
    உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. சாலைகள், பாதுகாப்பு கட்டடங்கள், ஹமாஸின் பயிற்சி முகாம்கள், வீடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. குண்டுமழையின் சப்தம் காசா முழுதும் எதிரொலித்தது.

    காசா பகுதியில் பல கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு யூதர்கள், கிறிஸ்ததுவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், இரு நாட்டின் எல்லையில் உள்ள காசா மலைக்குன்று உள்ளிட்ட பகுதிகள், ஹமாஸ் எனப்படும் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    ஜெருசலத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் தொடர்பாக சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது.இதையடுத்து, இஸ்ரேல் மீது, காசாவில் இருந்து, ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது

    இந்நிலையில், காசாவில், நேற்று ஒரு நாள் மட்டும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடக்கும் மோதலில், ஒரு நாளில் ஏற்பட்டுள்ள அதிக பலி இதுவாகும். இதைத் தவிர 50க்கும் மேற்பட்டார் காயமடைந்து உள்ளனர்.சில உயரமான கட்டடங்களும் தகர்க்கப்பட்டுள்ளன. ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்கள் இந்தக் கட்டடங்களில் பதுங்கியிருந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான யெஷியே சின்வர், அவரது சகோதரர் முகமது ஆகியோர் தங்கியிருந்த வீடும், இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது.அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது பாதுகாப்பாக வெளியேறி விட்டனரா என்பது குறித்த தகவல், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை நடந்துள்ள தாக்குதலில், 58 குழந்தைகள், 34 பெண்கள் உள்பட, 197 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது, அதே சமயத்தில் போர்நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

    முஸ்லிம் நாடுகள் தனி பாலஸ்தீனமே தீர்வு என்று பேசத்தொடங்கியுள்ளன.
    Published by:Muthukumar
    First published: