Home /News /international /

60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போடும்பணியை இஸ்ரேல் நாடு தொடங்கியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போடும்பணியை இஸ்ரேல் நாடு தொடங்கியுள்ளது.

மாதிரி படம்

மாதிரி படம்

மொத்தம் 92 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டில், 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களை செலுத்தியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போடும்பணியை இஸ்ரேல் நாடு தொடங்கியுள்ளது.

தலைநகர் டெல் அவிவில் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த பணியில், முதியோர்களும் சுகாதார பணியாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். இதற்காக மிகப்பெரும் அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, மக்கள் எளிதில் சென்று செலுத்திக் கொள்ளும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4 மாதத்திற்கு முன்பு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது இந்த 4-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிங்க :வானிலிருந்து கொட்டிய அதிசய ‘மீன் மழை’.. வியந்துபோன மக்கள் - படங்கள்

ஏற்கனவே 3 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்தது. இதனால் மருத்துவ வல்லுனர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட இஸ்ரேல் அரசு, 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 4வது டோஸை செலுத்திக் கொள்ளும் முடிவுக்கு ஞாயிறன்று ஒப்புதல் அளித்தது.


பல்வேறு நாடுகளில் 3 டோஸ்களை மட்டுமே போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு அவை செலுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகளுக்காக 4 டோஸ்களை செலுத்தும் முதல் நாடு என்ற பெயர் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளது.

அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 6,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரவல் இரு மடங்காக அதிகரிப்பது என்பது குறுகிய காலகட்டத்தில் நடப்பதால் மக்களிடையே ஒருவித அச்சம் காணப்படுகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

மொத்தம் 92 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டில், 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களை செலுத்தியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், கூடுதல் டோஸ்களை செலுத்திக் கொள்ளலாம் என மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதையும் படிங்க :   மனைவியின் தகாத உறவை நிரூபிக்க மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்
Published by:Musthak
First published:

Tags: Corona Vaccine, Israel

அடுத்த செய்தி