இந்திய அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நபரை ரஷ்ய பாதுகாப்பு துறையான RFSS (Russian Federal Security Service) கைது செய்தது.
ஐஎஸ் பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவரை கைது செய்த ரஷ்ய பாதுகாப்புத் துறை, அவரை தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தீவிரவாதி மத்திய ஆசியா பகுதியை சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இந்தியாவின் ஆளுங்கட்சி தலைவர் ஒருவரை, மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஐஎஸ் தலைவர் ஒருவரால் துருக்கி நாட்டில் தற்கொலைப்படை நபராக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர் என தெரியவந்தது. மேலும் இந்த ஆட்சேர்கை நடவடிக்கை டெலிகிராம் மூலமாகவும் பின்னர் இஸ்தான்புலில் சில சந்திப்புகள் மூலமாகவும் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவிற்கு சென்று இந்தியாவிற்கு செல்ல தேவையான ஆவணங்களை பெற்று, இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கை மேற்கொள்ளவதே பிடிப்பட்ட பயங்கரவாதிக்கு கொடுக்கப்பட்ட வேலை என விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தை பொருத்தவரை, ஐ.எஸ் அமைப்பு பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பரப்புரை செய்கிறது எனவும் அதனை தீவிரமாக கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISI terrorist, ISIS plan, Russia