• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஐ.எஸ் வீழ்ந்துவிட்டதா? டிரம்ப் கருத்துடன் முரண்படும் பிரிட்டன்

ஐ.எஸ் வீழ்ந்துவிட்டதா? டிரம்ப் கருத்துடன் முரண்படும் பிரிட்டன்

ஐஎஸ் அமைப்பினர் (கோப்புப்படம்)

ஐஎஸ் அமைப்பினர் (கோப்புப்படம்)

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்று ட்வீட் செய்த டிரம்ப், அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள இதுவே சரியான தருணம் என்று அவர் கூறியிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிரியாவில் இருந்து அமெரிக்கப்படைகள் திரும்பப்பெற இதுவே சரியான தருணம் என்று டிரம்ப் கூறிய நிலையில், ”நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு தலையெடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் வசம் கொண்டுவந்து ஆட்சி செய்து வந்தனர். அங்குள்ள மக்கள் மீது கடுமையான ஆட்சியை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சிரியாவின் மற்றொரு இனக்குழுவான குர்துப் போராளிகள் மற்றும் சிரிய ஜனநாயகப் படையினர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கப் படையினர் ஐ.எஸ். குழுவினரை ஒழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டனர். எனினும், இன்னும் சுமார் 14 ஆயிரம் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில இடங்களில் சண்டை நடந்தும் வருகிறது.

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். மேலும், சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள இதுவே சரியான தருணம் என்று அவர் கூறியிருந்தார்.

Donald Trump | அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்


எனினும், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஐ.எஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியதில் பிரிட்டன் முரண்பட்டுள்ளது.

“சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை கூட்டுப்படை தொடங்கியதில் இருந்து ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிழக்கு சிரியாவில் ஐஎஸ் ஆக்கிரமிப்பில் உள்ள கடைசி பகுதியையும் கைப்பற்றி முன்னேறினோம். ஆனால், இன்னும் நாம் முன்னேற வேண்டி உள்ளது. அவர்களிடம் பெரிய பிராந்தியம் இல்லாதபோதும், தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும்.



சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: