முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்க படைகள் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் உயிரிழப்பு... அதிபர் ஜோ பைடன் தகவல்

அமெரிக்க படைகள் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் உயிரிழப்பு... அதிபர் ஜோ பைடன் தகவல்

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி செய்துள்ளார்.

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி செய்துள்ளார்.

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்க படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் அபு இப்ராகில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த முக்கிய தாக்குதலில் அப்போதைய ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராகிம் அல் ஹாஷிமி அல் குரேஷி செயல்பட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள் : அரச குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் தாய்மைக்கு உரிய கடமை தவறாத கேட் மிடில்டன்!

இந்நிலையில், சிரியா நாட்டின் வட மேற்கு பகுதியான இத்லிபில் அமெரிக்க படைகள் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டன. அப்போது, அபு இப்ராகிம் இருந்த இடம் அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்பின்னர் சரண் அடையுமாறு அமெரிக்க படைகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்காத அபு இப்ராகிம் தாக்குதலில் ஈடுபட்டார். இரு தரப்புக்கும் நடந்த மோதலில் அபு இப்ராகிம் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் தப்ப முடியாது என அறிந்து, குடும்பத்தினருடன் அபு இப்ராகிம் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி செய்துள்ளார். சிரியாவில் அமெரிக்க மேற்கொண்ட நடவடிக்கையானது, தீவிரவாதம் உலகில் எங்கிருந்தாலும் அதனை அமெரிக்க ஒழிக்கும் என்பதை உலகிற்கு சொல்வதாக இருக்கிறது என்று, ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : எத்தியோப்பியாவில் பசியால் வாடும் 46 லட்சம் மக்கள் - உணவுக்காக பிச்சை எடுக்கும் மருத்துவர்கள்

அபு இப்ராகிம் மீதான தாக்குதலை நடத்திய அமெரிக்க படைகள் பத்திரமாக முகாமுக்கு திரும்பி விட்டதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.

தாக்குதலின்போது காயமடைந்த தீவிரவாதிகள் அல்லாத பொதுமக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட மிக முக்கிய ராணுவ நடவடிக்கையாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

First published:

Tags: ISIS